
வைட்டமின் இரண்டு வகைப்படும், அதாவது கொழுப்பில் கரைவது மற்றும் நீரில் கரைவது எனப் பார்த்தோம். அதில் வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரைவது. உடலில் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை, குழந்தை வளர்ச்சியை மேம்படுத்த வைட்டமின் ஏ மிகவும் அவசியம். நன்மைகள் நிறைய இருந்தாலும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்வதும் ஆபத்து தான்.
வைட்டமின் ஏ;
வைட்டமின் ஏ என்றால் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் கொழுப்பில் கரையும் காம்பவுண்ட்களின் கலவையாகும். இரண்டு வகையான வைட்டமின் ஏ இருக்கிறது. இந்த இரண்டு வகையான வைட்டமின் ஏ வை உடல் பயன்படுத்திக்கொள்ள அதை ரெட்டினால் (retinol) மற்றும் ரெடினாய்க் அமிலங்கலாக (retinoic acid) மாற்ற வேண்டும்.
உடலில் உள்ள திசுக்களில் சேமித்து தேவைப்படும் போது இவற்றை உடல் பயன்படுத்திக்கொள்ளும். வைட்டமின் ஏ-வை நாம் உனவு மற்றும் பல்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ஏ வகைகள்:
இரண்டு வகைப்படும் என்று பார்த்தோம். அவை முன்னுரைக்கப்பட்ட வைட்டமின் ஏ மற்றும் ப்ரோவைடமின் ஏ. முன்னுரைக்கப்பட்ட வைட்டமின் என்றால் இறைச்சி, பால் பொருட்களில் அதிகமாக இருக்கும். ப்ரோவைட்டமின் ஏ என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய்களில் அதிகம் இருக்கும்.
வைட்டமின் ஏ செயல்பாடு:
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான வைட்டமின் ஏ செல் வளர்ச்சி, குழந்தை வளர்ச்சி இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்துகிறது. ஆனால் முக்கிய செயல்பாடு கண்களின் ஆரோக்கியமும் கண் பார்வை தான்.
ரெட்டினால்(Retinal) ஒப்ஸின் (opsin) என்னும் புரோட்டினுடன் சேர்ந்து வண்ண பார்வை மற்றும் குறைந்த ஒளி பார்வைக்கு தேவையான ரோடாப்சின் (rhodopsin)என்னும் மூலக்கூறை உருவாக்குகிறது. கண்களின் வெளிப்புறமான பகுதியான கார்னீயாவையும் (cornea) கண்களின் மேற்பரப்பு மற்றும் கண்களை சுற்றியிருக்கும் உட்புறத்தை மூடியுள்ள மெல்லிய ஜவ்வான கான்ஜூண்டிவாவையும் (conjunctiva) பாதுகாக்கிறது என்று இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. trusted source
சருமம், காது பகுதியின் உள்பக்கம், நுரையீரல், சிறுநீர்பைகளில் மேற்பரப்பில் உள்ள திசுக்களை பராமரிக்கவும் வைட்டமின் ஏ அவசியம்.
தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் வெள்ளை அணுக்களை டி-செல்கள் என்போம். அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்கிறது.
சருமம் ஆரோக்கியத்திற்கும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ அவசியம் என்பதை இந்த ஆராய்ச்சி கூறியுள்ளது. trusted source
