
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிகள்:
- உடற்பயிற்சி:ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த அழுத்த அளவை குறைக்கிறது குறிப்பாக ஆண்களுக்கு என்று ஆய்வு ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 65 ஆய்வுகள் மேற்கொண்டனர். research source
இதய துடிப்பு மற்றும் மூச்சு விடும் அளவை அதிகப்படுத்தினால் இதயம் வலிமையடைந்து குறைவான முயற்சியுடன் இதயம் பம்ப் செய்கிறது. இதனால் தமனிகளில் அழுத்தத்தை குறைப்பதால் இரத்த அழுத்தமும் குறைகிறது.
- அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்:
2014 ஆய்வு படி, சர்க்கரையில் ஃப்ரக்டோஸ் இருப்பதால் உப்பை விட இது இரத்த அழுத்ததை அதிகரிக்க செய்கிறது. அதனால் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருக்க வேண்டும். குறைவான சர்க்கரை எடுத்துக் கொள்வதால் உடல் எடையும் குறைகிறது.
- மன அழுத்தம்:
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து தள்ளி இருங்கள். வேலைஇடத்தில் இருக்கும் மன அழுத்தங்களை எப்படி கையாள்வது என்று தெரிந்துக் கொள்வதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் இருக்க செய்யலாம்.
- இரத்த அழுத்தத்தை குறைக்கும் சப்லிமண்ட்ஸ்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உணவிஉல் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை அளிக்கும். பாலில் இருந்து whey protein இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. உடலில் மெக்னீசியம் குறைபாடும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிரது. ஆகையால், மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுப்பதால் இரத்த அழுத்தத்தில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது.
- புரோட்டின் நிறைந்த உணவுகள்:
2014 நடத்தப்பட்ட ஆய்வில், புர்தம் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு இரத்த அழுத்த அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டது. 100 கிராம் புரதம் எடுத்துக்கொள்பவர்களுக்கு 40 சதவீதம் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும்.
6.பரிந்துரைக்கும் மாத்திரைகள்
வாழ்க்கை முறைகளை மாற்றினாலும் இரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்வதால் மற்ற விளைவுகளையும் தடுக்க முடிகிறது.
