
பொதுவாக கர்ப்பக் காலத்தின் அறிகுறிகள் மாதவிடாய் தள்ளி போவது, மார்பகம் மிருதுவாக மாறுவது, மசக்கை போன்றவை தான். ஆனால் சிலருக்கு இந்த முதல் அறிகுறிகளை தாண்டி இன்னும் பல அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும் அது என்ன என்பதை பார்க்கலாமா?
- சுவை:
கர்ப்பக் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் கர்ப்பிணிகள் பலருக்கு சுவையில் மாற்றம் ஏற்படும்.
சிலருக்கு சுவையில் மாற்றம் ஏற்பட்டு இரும்பு, துவர்ப்பு, இனிப்பு குறைவாக இருக்கும். இதை dysgeusia என்று சொல்வார்கள்.
2.வெள்ளைப்படுதல்:
வெள்ளைப்படுதலும் கர்ப்பத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் சிலருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு அதிகமாக வெள்ளை படும் இது கர்ப்பக் காலம் முழுவதும் தொடரும். இது அடர்த்தியாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கர்ப்பக் காலத்தில் ஹார்மோன் சுரப்பு அதிகமானதாலும் பெண்ணுறுப்பில் இரத்த போக்காலும் வெள்ளைப் படுதல் அதிகமாகிறது. இதனால் உங்கள் பெண்ணுறுப்பு மிருதுவாகவும் கர்ப்பைக்கும் பெண்ணுறுப்பையும் இணைக்கும் கருப்பை வாய் தொற்றிலிருந்தும் காக்கிறது.
ஒருவேளை உங்களுக்கு வெள்ளைப்படுதல் துர்நாற்றத்துடன், எரிச்சல், அரிப்பு, பச்சை, மஞ்சள் நிறம், மிகவும் அடர்த்தியாக அல்லது தண்ணியாக வந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
இந்த அறிகுறிகள் தொற்றுநோய்கள் இருந்தால் வரக்கூடியது, இவற்றை கவனிக்கவில்லை என்றால் கருப்பையை பாதிக்கும். ஹார்மோன் மாற்றத்தினால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்கள் வருவதற்கு அதிகம் வாய்ப்பும் உண்டு.
- மூட் ஸ்விங்ஸ்:
ஹார்மோன் மாற்றம் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இவை ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான அறிகுறி ஆகும். trusted source
- எதிர்ப்பு சக்தி:
இந்த நேரத்தில் உங்கள் எதிர்ப்பு சக்தி குறைவதால் அதிக தொற்றுகள் ஏறபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகையால் ஆரம்ப கர்ப்ப காலத்தில் காய்ச்சல் சளி போன்றவை வருவதும் பொதுவானது தான்.
காய்ச்சல் சளி போன்றவற்றை தாண்டி உங்களுக்கு பிற தீவிரமான தொற்றுகளும் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் மருத்தவரின் ஆலோசனைகளை பின்பற்றினால் குழந்தைக்கு எவ்வித பிரச்னை வராது.
- ஸ்பாட்டிங்:
மூன்றில் ஒரு கர்ப்பத்தில் இரத்தம் சிறிய அளவில் வெளியேறுகிறது. கருவுற்ற முட்டை கருப்பை புறணியில் சேரும்போது சிறிய அளவில் வெளியேறலாம். இதுவும் முன்கூட்டியே உங்களுக்கு தென்படும் அறிகுறிகளில் ஒன்று.
பிற காரணங்களாலும் இரத்தம் வெளியேறலாம் அது கர்ப்பப்பை வாய் எரிச்சல், எக்டோபிக் கர்ப்பம், அச்சுறுத்தப்பட்ட கருச்சிதைவு போன்றவற்றாலும் இருக்கலாம்.
- தலைவலி:
கர்ப்பிணிகளுக்கு தலைவலி அல்லது சோர்வது ஏற்படுவதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவை முதல் மூன்று மாமாதத்தில் வரக்கூடியது. இந்த நேரத்தில் இரத்த அழுத்தம் குறைய செய்து இரத்த நாளங்கள் விரிவடைகிறது.
இரத்த நாளங்கள் விரிவடைவதால் நீங்கள் உங்கள் பொசிஷனை மாற்றுவதால் மயக்கம் வருவது போல் உணர்வீர்கள். உதாரணமாக உட்கார்ந்து எழும் போது இவ்வாறு உணர்வீர்கள்.
ஒருவேளை உங்களுக்கு அடிவயிறு வலி, பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு மற்றும் தலைசுற்றலுடன் சேர்ந்து வந்தால் அவை எக்டோபிக் கர்ப்பத்தை குறிக்கும் அறிகுறியாகும். இது கரு கருக்குழாயில் வளரும் ஆபத்தான நிலை ஆகும்.
- மலச்சிக்கல்:
ஹார்மோன் மாற்றத்தினால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. மேலும் உங்களுக்கு கருப்பை வளர்வதால் குடல்கள் மாறி உங்களது இயல்பானவற்றை பாதிக்கும். மகப்பேறுக்கு முன்பு எடுக்கும் மருந்துகளில் இரும்பு சத்து இருப்பதாலும் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.
அதே போல் கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் பொறுமையாக செயல்படும். அதாவது நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்களை உங்கள் இரத்த ஓட்டம் பொறுமையாக உறிவதால் சிசுவிற்கும் தேவையான ஊட்டச்சத்து செல்கிறது.
நார்சத்து அதிகமுள்ள உணவுகள், தொடர்ந்து உடற்பயிற்சி, நீர் மற்றும் ஜுஸ் போன்றவற்றை அதிகமாக குடிப்பதால் மலசிக்கலை சரிபடுத்தலாம்.
- தலைவலி, சிறுநீர் அதிகமாக கழிப்பது:
இரத்த அளவும், ஹார்மோன்களும் மாறுவதால் தலைவலி வருகிறது. சில கர்ப்பிணிகளுக்கு மாதவிடாயில் வருவது போன்ற வலி, சிறுநீர் அதிகமாக கழிப்பார்கள். ஏனென்றால் கருப்பை வளர்வதால் சிறுநீர்பையில் அதிக அழுத்தம் கொடுப்பதால் இவை ஏற்படுகிறது.
இவை எல்லாம் கர்ப்பகாலத்தில் ஆரம்பத்தில் இருக்க கூடிய அறிகுறிகள் தான். ஆனால் சிலருக்கு இது முன்னரே தென்படும் என்பதால் கருத்தரித்தலை எதிர்பார்க்கும் பெண்கள் இந்த அறிகுறியை உணர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
