
பழங்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துபவர்களுன் கண்ணை கவர்வது டிராகன் பழம். அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் இரண்டையும் காக்கின்றன.
ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின், ஊட்டச்சத்துக்கள் வயதாகும் அறிகுறிகள், முகப்பரு மற்றும் சன் பர்ன்களுக்கு மருந்தாக விளங்குகின்றன. இதை எப்படி சரியாக பயன்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் என்ன என்று பார்ப்போம்.
முகப்பரு:
இதில் உள்ள வைட்டமின் சி முகப்பருவை தடுக்கிறது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சருமம் உடையாமல் இருக்கவும் ஆரோக்கியமாகவும் பொலிவு பெறவும் உதவுகிறது.
- இயற்கை மாய்ஸ்ட்ரைசர்:
இதில் 80% தண்ணீர், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் நிறைந்துள்ளதால் இயற்கை மாய்ஸ்ட்ரைசராக செயல்படுகிறது.
- வயதானவர்கள் போல் தோற்றமளிப்பது:
வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை சரியின்மை, தூக்கமின்மை, ரேடிக்கல் பாதிப்பு, வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதால் சருமம் சீக்கிரம் வயதானவர்வகள் போல் தோற்றமளிக்க செய்கிறது. கோடு, சுருக்கம் போன்ற அறிகுறிகளையும் தடுக்கிறது.
4.சரும பொலிவு:
வைட்டமின் சி உள்ளதால் சருமத்தில் இருக்கும் அனைத்தையும் நீக்கி பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் என்றும் இளமையாக இருக்கும் உணர்வையும் கொடுக்கின்றன.
5.சன்பர்ன்:
இதில் வைட்டமின் பி3 நிறைந்துள்ளதால் வெயிலில் புற ஊதாக் கதிர்களால் உருவாகும் அழற்சி, சிவப்பு நிறம், அரிப்பு போன்றவைகளிலிருந்து உடனடி தீர்வு அளிக்கிறது. சருமத்தை கதிர்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது
- தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?
பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் தூக்கம் என்பது மிக மிக முக்கியமானது. தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்.
தூக்கமும் தூங்கும் நேரமும் தான் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு பங்கு வகிக்கின்றன தூக்கத்தை போன்று தூங்கும் நேரமும் முக்கியம். ஏனெனில் மோசமான தூக்கத்தின் அறிகுறிகள், போதுமான அளவு தூங்கிய பிறகும் ஓய்வெடுக்காமல் இருப்பது இரவில் தூக்கம் வராமல் மீண்டும் மீண்டும் எழுந்திருப்பது எல்லாமே ஆரோக்கிய கேடுகள் தான்.
age: 0-3 months
0 முதல் 3 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள் தினமும் 14-17 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
age: 4-11 months
4 முதல் 11 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள் தினமும் 12-15 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
age: 1-2 years
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 11-14 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
age:3-5 years
3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10-13 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
age: 6-13 years
6 முதல் 13 வயது வரை உள்ள வளரும் குழந்தைகள் தினமும் 9-11 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
age: 14-17 years
14 முதல் 17 பதின்ம வயது உள்ளவர்கள் தினமும் 8-10 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
பெரும்பாலான பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை தேவைப்படலாம். எனினும் சிலருக்கு ஒவ்வொரு நாளும் 6 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் தேவைப்படலாம்.
65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 7-8 மணி நேர தூக்கம் அவசியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு..
கர்ப்பத்தின் முதல் 3 மாதங்கள் வரை உள்ளபெண்கள் வழக்கத்தை விட அதிக நேரம் தூக்கம் தேவைப்படலாம்.
ஆரோக்கியமான தூக்கத்துக்கு என்ன செய்யலாம்?
- உறங்குவதற்கு நேரம் திட்டமிடுங்கள்
- தூங்குவதற்கு அட்டவனையை திட்டமிடுங்கள்
- வார இறுதி நாட்களிலும் விழித்திருக்காமல் சரியான நேரத்தில் தூங்க செய்யுங்கள்.
- படுக்கையறை இருட்டாக அமைதியாக இருக்கட்டும். வசதியான வெப்பநிலையில் தூக்கம் இருக்கட்டும்
- எலக்ட்ரானிக் திரைகள் தவிருங்கள்.
- தூங்குவதர்கு முன்பு காஃபி, அதிக உணவு தவிருங்கள்.
- நேரமிருந்தால் வெதுவெதுப்பான குளியல் போடுங்கள். தூங்கும் முன்பு பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
- உடற்பயிற்சி செய்யலாம்.
- தூக்கம் வரவில்லையெனில் அமைதியான புத்தம் படிக்கவும்.
- தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை போட்டு பழக்க வேண்டாம். உங்கள் டாக்டரிடம் பேசுங்கள்.
