
உலக மக்களில் பலருக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். டயாபட்டீஸ் என்பது இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் பயன்படுத்துவதில் பிரச்னை இருப்பதாகும்.
உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தான் இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை சீராக்கும். இன்சுலின் இல்லை என்றால் இரத்தத்தில் குளுக்கோஸை சேமிக்க முடியாமல் போகும்.
சர்க்கரை நோய் இருந்தும் நாம் சரியான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை பாதிக்கும்.
சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பல்வேறு அறிகுறிகள் மற்றூம் தீவிரமான உடல் பிரச்னைகளை உண்டாக்கும்.
பார்வையில் சிரமம்
கைகள் மற்றும் குச்ச உணர்வு அல்லது உணர்வின்மை
இதய நோய் அல்லது பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமக இருக்கும்.
நேரத்திற்கான சிகிச்சை மற்றும் டெஸ்ட் எடுப்பதால் பலவிதமான பிரச்னைகளை தவிர்க்கலாம்.
சர்க்கரை நோய் டெஸ்ட் யார் எடுக்கலாம்?
உலகில் பலருக்கு இருக்கும் சர்க்கரை வியாதில் டைப்-2 டயாபட்டீஸ் அதிகமாக இருப்பதாக கண்டுப்பிடிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் என்பதை கண்டுப்பிடிக்க மிகவும் சிரமமாக இருக்கும், ஏனென்றால் முதற்கட்ட அறிகுறிகள் பொறுமையாகவே தெரிய வரும்.
கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய்க்கு டெஸ்ட் எடுக்கலாம்:
- தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தால்
- எல்லா நேரமும் சோர்வாக உணர்தல்
- சாப்பிட்ட பின்பும் பசியாக உணர்தல்
- பார்வையில் குறைபாடு
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- காயம் அல்லது புண் சீக்கிரமாக குணமாகதது.
நீங்கள் அதிக உடல் எடை கொண்டவராக (பி.எம்.ஐ 25 மேல் இருந்தால்) இருந்தால் உங்களை சர்க்கரை நோய்க்கான டெஸ்ட் எடுக்க American Diabetes Association (ADA) அறிவுறுத்துகிறது அல்லது:
- அதிக இரத்த அழுத்தம்,
- இதய நோய்,
- அதிக triglycerides இருந்தால்,
- நல்ல கொழுப்பு குறைவாக இருந்தால்,
- குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால்
- இன்சுலின் எதிர்ப்புக்கான அறிகுறிகள் இருந்தால்
- பி.சி.ஓ.எஸ் அல்லது கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
- மேலும் நீங்கள் 45 வயது கடந்தவராக இருந்தால் முதற்கட்ட சர்க்கரை நோய்க்கான டெஸ்ட் எடுப்பதும் நல்லது. ஏனென்றால், வயது அதிகரிக்க இதன் தீவிரம் அதிகமாகலாம், தொடக்கத்தில் கண்டுப்பிடித்து விட்டால் பல்வேறு பிரச்னைகளை தடுக்கலாம்.
பல்வேறு விதமான டெஸ்டுகளை தொடர்ந்து பார்க்கலாம்
