
வைட்டமின் என்றால் என்ன?
வைட்டமின் என்பது இயற்கையாக உணவு பொருள்களில் இருக்கும் கரிமப் பொருட்கள். இதில் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தாலோ அதிகமாக இருந்தாலோ, உடலில் பல்வேறு பிரச்னைகள் வருகிறது. இதை குணப்படுத்த உணவுகள் இருந்தாலும் தொடக்கத்தில் கவனித்தால் அபாயத்தை தவிர்க்கலாம்.
வைட்டமின்களில் என்ன உள்ளது?
வைட்டமின்களில் கார்பன் உள்ளது. உணவில் இருக்கும் இந்த கார்பன் உடலிற்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாகும்.
வைட்டமின் எத்தனை வகைப்படும்?
வைட்டமின் இரண்டு வகைப்படும். நீரில் கரைவது மற்றும் கொழுப்பில் கரைவது. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
ஏ,டி,இ,கே. இந்த வைட்டமின்களை கொழுப்பு திசுக்கள், கல்லீரல்களில் மாதக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் சேமித்து வைக்கும்.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி நீரில் கரைவது. இவை உடலில் நிற்காது சிறுநீர் வழியாக வெளியேறும். கொழுப்பு வைட்டமின்களை விட நீரில் கரையும் வைட்டமின்களே உடலுக்கு மிகவும் முக்கியம்.
என்னென்ன வைட்டமின்கள் உள்ளது?
வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் பி7, வைட்டமின் பி9, வைட்டமின் 12 (இவை மொத்தமும் சேர்ந்தது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்) , வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் இ, வைட்டமின் கே.
வைட்டமின் குறைபாடு, அறிகுறிகள், உணவுகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
