ஆன்மிகம்

நிம்மதியான வாழ்க்கைக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

குல தெய்வமோ, இஷ்ட தெய்வமோ அவற்றின் அருளை பெறுவதற்கு உரிய மந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. எல்லோருக்கும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. இறைவனின் அருளை முழுமையாக பெறவும் வீட்டில் நிம்மதியும் கிடைக்க நீங்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள். 


எந்த பிறவியில் செய்த பாவமோ  நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். நிம்மதியே இல்லை, தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கவில்லை என்று சொல்லும் பலரை நாம் பார்க்கிறோமோ. ஒருவரது நிம்மதியான வாழ்வுக்கு குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் பித்ருக்களின் ஆசிவாதமும் தேவை. இவற்றில் ஒன்றை செய்ய தவறினால் கூட  தெய்வங்களின் அனுகூலம்  கிடைக்காமல் போகலாம்.

தெய்வ அனுகூலம் கிடைக்காத நிலையில் வீட்டில் எப்போதும் பொருளாதர பிரச்னை, குடும்பத்தில் நிம்மதியின்றி இருப்பது, ஆரோக்கிய பிரச்னை என ஒருத்தர் மாற்றி ஒருவருக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். இப்படியான துன்பங்களை எதிர்கொள்ளும் போது குலதெய்வத்துக்கு பூஜை போட்டு சில பரிகாரங்களை  செய்வது அவசியம்.

குடும்பத்தில் எல்லா வளமும் பெறவும்,  இறைவனின் ஆசி  முழுமையாக இருக்கவும் எல்லோரும் விரும்புவோம்.  ஆனால் பிரச்சனையில்லாத வாழ்க்கையை மனிதர்கள் வாழ்வதில்லை. பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து நாம் அதை வலிமையாக எதிர்கொள்ள இறைவனின் துணை தேவைப்படுகிறது.

நமது துன்பங்கள் விலக வேண்டுமென்றால் குலதெய்வத்தின் பார்வை நம்மீது படவேண்டும். குல தெய்வ வழிபாடு தவறாமல் செய்யுங்கள். அதன் பிறகு இஷ்ட தெய்வத்தின் அருளை பெற மந்திரங்கள் சொல்வது பலனை அளிக்கும்.  ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ள நிலையில் அனைத்தையும்  அந்தந்த தெய்வத்துக்குரிய நாளில் சொல்வது பலன் அளிக்கும்.

ஆனால் தினசரி வேலை பளுவில்  ஒவ்வொரு தெய்வத்துக்குமான மந்திரங்களை தனித்தனியாக சொல்வதும்  நாம் நினைவில் கொள்வது சிரமமாக இருக்கும். எல்லா  தெய்வங்களின் அருள் பார்வை பெறுவதற்குரிய மந்திரம் சொல்லலாம்.
இறைவனை வணங்கும் போது உடலும் மனமும் தூய்மையுடன் இருக்க வேண்டும். தூய்மையான மனத்துடன் வழிபடும் போது இறைவன் உருகி வரம் தருவான்.

ஓம் ஒங்கராய நமசிவாய
ஓம் நகாராய நமசிவாய
ஓம் மகாராய நமசிவாய
ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய
ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ஸ்ரீ குரு தேவாய பரமபுருசாய சர்வதேவதா வசீகனாய சர்வாரிஷ்ட விநாசாய சர்வ துர் மந்திர சேதனாய திரிலோக்ய வசமானய சுவாஹா

தினமும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கி உடல் சுத்தம் செய்து கிழக்கு  முகம் பார்த்து அகல் விளக்கு ஏற்றி  மனதை ஒருமுகப்படுத்தி உட்கார வேண்டும்.  பிறகு இந்த மந்திரத்தை 12 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் இந்த மந்திரத்தை  உச்சரித்து வந்தால்  துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் ஒளி சிறக்கும். இறைவனின் ஆசி முழுமையாக கிடைப்பதை உணர்வீர்கள்.

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...