ஆரோக்கியம்

பட்டையை வெச்சு முடியை பளபளன்னு அடர்த்தியா வளர வைக்கலாமா?

கூந்தலின் அழகை அதிகரிக்க  உங்கள் கிச்சனில் இருக்கும்  பொருள்களே போதும். அதில் ஒன்று அஞ்சறை பெட்டியிலும் மருத்துவ பெட்டியிலும் இருக்கும் இலவங்கம்.  இதை கொண்டு  கூந்தலின் அழகையும் அடர்த்தியையும்  எப்படி மேம்படுத்துவது என்பதை பார்க்கலாம். 


கூந்தல் அழகாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க யாருக்கு ஆசை இல்லாமல் இருக்கும்.  அடிக்கடி அழகுப் பொருள்கள் பயன்படுத்துவதால் கூந்தல் அழகாகிறது அடர்த்தியாகிறது என்பதை தாண்டி சமயங்களில்  கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது  என்பதே உண்மை . 


வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் ஒன்றான பட்டை அழற்சி எதிர்ப்பு, ஆன்டி- ஆக்சிடண்ட்ஸ் போன்ற நன்மைகள் கூந்தலுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. 

பட்டை  சைனஸ் அல்லது அழற்சி பிரச்னைகளை கடந்து கூந்தல் பிரச்னைகளுக்கும் பயன்படுத்தலாம். பட்டையில் உள்ள அவசியமான ஊட்டச்சத்துக்கள் மற்றூம் ப்ரோசையானிடின் (procyanidin) கூந்தலின் மயிர் கால்களை தூண்டி வேகமான வளர்ச்சியை மேம்படுத்தும். 

கூந்தல் உதிர்வுக்கும் இது உதவுகிறது. நடத்தப்பட்ட ஆய்வில் பட்டை கூந்தல் உதிர்வு மற்றும் வழுக்கை விழுவதை தடுக்கிறது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு தேவைப்படும் இயற்கை ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், ஆண்டி-மைக்ரோபியல், polyphenols இருக்கிறது. ஆண்டி-மைக்ரோபியல் திறன் உச்சந்தலையில் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

Karger International வெளியிடப்பட்ட ஆய்வில் பட்டையில் உள்ள ப்ரோசையானிடின் procyanidin கூந்தலின் வளர்ச்சியில் நேர்மறையான மாற்றங்களை அளித்துள்ளது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெயில் பட்டையை கலந்து பயன்படுத்தலாம். 

பட்டையில் cinnamaldehyde இருப்பதால் இரத்த நாளங்களை விரிவடைய செய்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை  வேகமாக்குகிறது. கூந்தலுக்கும் பளபளப்பான பொலிவை தருகிறது. 

இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு திறனால் பொடுகு மற்றூம் அழற்சியை எதிர்த்து ரேடிக்கல் பாதிப்பிலிருந்து உச்சந்தலையை பாதுகாக்கிறது. 

பட்டையை எப்படி பயன்படுத்துவது?

பட்டையை இரண்டு வகையாக கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

  1. இரண்டு ஸ்பூன் அரைத்த பட்டை பொடியை ஒரு ஸ்பூன் தேன், தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல செய்ய வேண்டும். ஸ்கால்பில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் கூந்தலின் வளர்ச்சியில் மாற்றத்தை உணர்வீர்கள்.
  2. முட்டை, தேங்காய் எண்ணெய் அரைத்த பட்டையை சேர்த்து பேஸ்ட்டாக செய்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள்.  இது கூந்தலை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும். 

பட்டை அளவு:

பட்டையை பயன்படுத்திய பின் உங்களது கூந்தல் வளர்ச்சியிம் மாற்றம் ஏற்பட்டாலும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் எவ்வித வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதற்கு முன் கலந்து ஆலோசியுங்கள். மேலும் எவ்வளவு பட்டையை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். 

இது கூந்தலின் வளர்ச்சியை மேம்படுத்தினாலும் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். நிபுணர்கள் பரிந்துரைத்த அளவில் பயன்படுத்துங்கள். ஹேர் மாஸ்கை போடுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள்.

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

pregnant women with tablets
ஆரோக்கியம்

கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் அமிலம் முக்கியம்? தினமும் எவ்வளவு தேவை?

கர்ப்ப காலத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பே வேண்டிய வைட்டமின்களில் முக்கியமானது தான் இந்த ஃபோலிக் ஆசிட்.ஃபோலிக் ஆசிட் ...
okra
ஆரோக்கியம்

ஓக்ரா தண்ணீர் எப்போது குடிக்கலாம் ஆராய்ச்சி என்ன சொல்கிறது

ஓக்ரா என்றால் வெண்டைக்காய். வெண்டைக்காயை 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடிப்பதால் நிறைய நன்மைகள் உள்ளது என்கின்றனர். ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

சர்க்கரை நோய் பரிசோதனை எப்போது செய்யணும்?

உலக மக்களில் பலருக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். டயாபட்டீஸ் என்பது இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது உற்பத்தியாகும் ...
ஆரோக்கியம்

சரும அழகை போற்றி பாதுகாக்க டிராகன் பழம்!

பழங்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துபவர்களுன் கண்ணை கவர்வது டிராகன் பழம். அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ...