ஆரோக்கியம்

பளபளபாக்கும் மிருதுவான கூந்தலுக்கான 10 டிப்ஸ்..

India, hair care, hair oil, adult, adults only

பெண்களுக்கு மிருதுவான நீளமான பளபளக்கும் கூந்தல் இருக்க மிகவும் ஆசை. ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களாலும் சரியான பராமரிப்பு இல்லாததாலும் கூந்தல் சேதமடைகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களும் இதற்கு காரணமாகும்.

இதை குணப்படுத்து உங்களுக்கான 10 டிப்ஸ்:

  1. கூந்தலின் தன்மையை அறியுங்கள்:

நீங்கள் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் கூந்தலின் நன்மையை அறிவது மிகவும் அவசியம். கரடுமுரடான வறண்ட கூந்தலுக்கு பராமரிப்பு அதிகமாக இருக்க வேண்டும். நீளமான ஸ்ட்ரெய்டான கூந்தல் இருப்பவர்களுக்கு குறைவான பராமரிப்பே தேவைப்படும்.

ஏனென்றால், நீளமான முடி உள்ளவர்களுக்கு உச்சந்தலையில் உள்ள எண்ணெய் மயிர்கால்கள் வரை சுலபமாக செல்லும் ஆனால் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு அவை கடினமாக இருக்கும். 

உங்கள் வயதிற்கேற்ப எண்ணெயின் உற்பத்தி குறைவதால்  கூந்தலின் தன்மை மாறுகிறது. மேலும் பருவ காலத்திற்கேற்பவும் மாறுகிறது.

  1. சிகிச்சை:

நீங்கள கூந்தலை அழகு நிலையங்கள் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது சில நாட்களுக்கே இருக்கும் மேலும் அதில் கலந்திருக்கும் இரசாயங்கள் கூந்தலை முதலில் அழகாக காண்பித்து பின் கூந்தலை சேதமடைய செய்யும்.  இருப்பினும் உங்களுக்கு இதுபோன்ற சிகிச்சை மேற் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ஆறு வாரத்திற்கு ஒருமுறை செல்லலாம். 

  1. வெப்பக்கருவிகள்:

ஹேர் ட்ரையர், கர்லிங் அயர்ன் போன்ற வெப்பக் கருவிகளை வைத்து பல ஹேர்ஸ்டைகள் செய்ய முடியும். இதை அதிகமாகவும் அதிக வெப்பத்துடன் செய்யும்போது கூந்தலில் கொப்பளங்களை உருவாக்கி மயிர்க்கால்களை சேதமடைய செய்கிறது. வெடிப்புகளையும் உருவாக்குகிறது. 

நீங்கள் வெப்ப கருவிகளை பயன்படுத்தும் போது அதிக ஈரத்துடன் ஹீட் செய்வது, அதிக சூட்டில் பயன்படுத்துவதை தவிருங்கள். வாரம் அல்லது நாட்களுக்கு  இடவெளி விட்டு பின் மறுபடியும் உபயோகபடுத்துங்கள்.

  1. தேங்காய் எண்ணெய்:

அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் தேங்காய் எண்ணெய் எப்போது இடம் பெறுகிறது. நடத்தப்பட்ட  ஆய்வில் தேங்காய் எண்ணெய் உங்களது வரண்ட கூந்தலை சரிபடுத்தி மிருதுவாக்கும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.  தேங்காய் எண்ணெய் தினமும் பயன்படுத்துவது உங்களுக்கு பிசுபிசுப்பு உணர்வை தருகிறது என்றால் ஒரு நாள் விட்டு தடவலாம். 

  1. ஆர்கன் எண்ணெய்:

ஆர்கன் எண்ணெய் கூந்தலை மாய்சுரைஸ் செய்யும் திறன் கொண்டது. நடத்தப்பட்ட ஆய்வில்  கூந்தல் பராமரிப்பு சரியாக இல்லையென்றாலும் ஆர்கன் எண்ணெய் பயன்படுத்தினால் உறுதியாக மாற்றத்தை உணர்வீர்கள். 

  1. ஆலிவ் எண்ணெய்:

ஹேர் கேரின் ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மையை தரக்கூடியது. கூந்தலின் நீர் மூலக்கூறுகளை விரிவடையாமல் மயிர்கால்களை பாதுகாக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை உங்களது நுனி முடியில் எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை உணரலாம். 

  1. ஹேர் மாஸ்க்:

கூந்தலுக்கு எண்ணேய் தேய்த்து வருவதுடன் ஹேர் மாஸ்க் போடுவதால் நீங்கள் இன்னும் நன்றாக பராமரிக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தினால் கூந்தல் இன்னும் ஈரபதமாக்கி மிருதுவாகிறது. 

தலைக்கு குளித்த பின் ஈரமில்லாமல் ஹேர் மாஸ்க் பயன்படுத்தி ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து குளிக்கலாம்.

  1. ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர்:

உங்களுக்கு ஆயில் ஸ்கால்ப் மற்றும் நுனியில் வறட்சியாக இருந்தால் ரெகுலராக தலைக்கு குளிக்க வேண்டும். கூந்தலில் ஷாம்பூ பயன்படுத்திய பின் நுனியில் மட்டும் கண்டிஷ்னர் போடலாம், இதனால் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும், கீழே மிருதுவாக்கும்.

  1. வெந்நீர்:

வெந்நீரில் குளித்தால் கூந்தலை சேதமாக்கி இன்னும் வறட்சியாக்கிறது. அதனால் எப்போதும் வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிப்பது நல்லது. நீங்கள் கண்டிஷ்னர் போட்டு முடித்த பின்னர் கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் தெரிய குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

இது போன்ரு செய்வதால் கூந்தலில் ஈரப்பதம் பாதிக்காமல் தேவையற்றவற்றை நீக்க உதவுகிறது.

  1. ஹேர் ஸ்டைல்ஸ்:

கூந்தலை வெளியே செல்லும்போது ஸ்டைல் செய்வது நன்றாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களால் (ரப்பர் பேண்ட், க்ளிப்) கூந்தல் இழுக்கும் போது சேதமடைவதால் முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

 

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆரோக்கியம்

தேசிய ஊட்டச்சத்து மாதம்: ஆரோக்கியமான உணவு பழக்கம் வீட்டிலிருந்தே தொடங்கட்டும்

நல்லா சாப்பிடு என்று சொன்றோமே சாப்பிடறதுன்னா என்ன தெரியுமா? வயிறு நிறைய சாப்பிடறதா? பிடிச்ச உணவை சாப்பிடறதா இல்ல விலை ...
ஆரோக்கியம்

H1N1: பன்றிக்காய்ச்சல் அறிகுறி இப்படிதான் இருக்குமாம்!

கோடை முடிந்து மழைக்காலத்தை எதிர்நோக்கும்போதே காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகளும் றெக்கை கட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. அடினோ வைரஸ், ரைனோ ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

ரேஷன் அரிசி சர்க்கரை நோயை குறைக்குமா?

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் கே.என்.நேரு பேசும்போது ரேஷன் அரிசி ரத்தச் சர்க்கரையைக் குறைக்கும் என்று கூறியிருந்தார். தற்போது இது குறித்து ...
lady sugar testing with the fenugreek image below ஆரோக்கியம்

வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க சுகர் சர்ருன்னு குறையும்…

வெந்தயம் வெந்தயம் பசை போன்று வழுவழுப்பாக இருக்கும்.இதன் சுவை கசப்புத்தனை கொண்டது என்பதால் இதை தனித்து எடுப்பதில்லை. தாளிப்பு பொருள்களுடன் ...
pregnant women with tablets ஆரோக்கியம்

கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் அமிலம் முக்கியம்? தினமும் எவ்வளவு தேவை?

கர்ப்ப காலத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பே வேண்டிய வைட்டமின்களில் முக்கியமானது தான் இந்த ஃபோலிக் ஆசிட்.ஃபோலிக் ஆசிட் ...