ஆரோக்கியம்

பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

young woman drinking a glass of milk

ஊட்டச்சத்து:

ஒரு கப் (244 கிராம்) முழுமையான பாலில் கால்சியம் 276 மில்லிகிராம், ஃபோலேட் 12 மைக்ரோகிராம், மெக்னீசியம் 24 மில்லிகிராம், ஃபாஸ்பரஸ் 205 மில்லிகிராம், பொட்டாசியம் 322 மில்லிகிராம், வைட்டமின் ஏ 112 மைக்ரோகிராம், வைட்டமின் பி12 1.10 மைக்ரோகிராம், துத்தநாகம் 0.90 மில்லிகிராம், புரதம் 7-8 கிராம் புரோட்டின் உள்ளடக்கியுள்ளது.  உடலுக்கு தேவையான 22 ஊட்டச்சத்துக்களில் 18 பால் கொடுக்கிறது. 

கொழுப்பு:

கரையும் கொழுப்பு- 4.5 கிராம்
கரையாத கொழுப்பு- 1.9 கிராம்
கொலஸ்ட்ரால்- 24 மில்லிகிராம்,

கொழுப்பின் அளவு மாறலாம் ஆனால் முழுமையான பாலில் அதிக கொழுப்பு உள்ளது. 

பால் நன்மைகள்:

தினமும் பால் குடிப்பதால் என்ன நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது. 

பசியை கட்டுப்படுத்துகிறது:

பால் குடிப்பது உடல் டை அதிகரிப்பு அல்லது ஒபிஸிட்டியுடன் தொடர்புடையது அல்ல. இது பசியை கட்டுப்படுத்தும் திறன் உடையது. 2013 ஆய்வில் 49 பேர் கலந்துக்கொண்டனர். இவர்களுக்கு பால் குடித்ததால் பசியின்மையும்  அவர்கள் எடுத்துக்கொண்ட கொழுப்பின் அளவும் குறைவாக இருந்தது என்று இந்த ஆய்வு கூறுகிறது.   

சில ஆய்வு முழுமையான பால் பொருட்கள் எடுத்துக்கொண்டால் குறைவான உடல் எடையுடன் தொடர்புடையது என்று கூறுகிறது. இன்னும் சில ஆய்வுகள் இவை உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது

எலும்பு வளர்வது:

குழந்தைகள் பால் குடிப்பதால் எலும்பின் எடை மற்றும் அடர்த்தி அதிகரிக்கவும் எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கிறது.

கர்ப்பிணிகள் முழுமையான் பால் பொருட்கள் கால்சியம் நிறைந்த உணவுகள் சாப்பிடும் கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு கூறப்பட்டது. 

பல் ஆரோக்கியம்:

பெரியவர்களுக்கு தேவைப்படும் கால்சியத்தில் 30 சதவீதம் ஒரு கப் பாலில் கிடைக்கிறது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோகியத்திற்கு தேவைப்படும் பொட்டாசியம் மெக்னீசியம் பாலில் இருக்கிறது. 

சர்க்கரை நோய் தடுக்கும்:

சர்க்கரை நோய் வந்தால் இதய பிரச்னை, பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்னை வருகிறது. பால் குடிப்பதால் பெரியவர்களுக்கு டைப்-2 டயாபட்டீஸ் தடுக்கலாம் என்று  இந்த ஆய்வு கூறுகிறது.  இரத்த சர்க்கரை அளவு சமமாக இருக்க தேவைப்ப்டும் புரதத்தை பால் குடிப்பதால் நமக்கு கிடைக்கிறது.

இதய ஆரோக்கியம்:

நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க பால் குடிக்கலாம். உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் தடுக்கலாம். இரத்த அழுத்தத்தை சீராக்க தேவைப்படும் மெக்னீசியம் பாலில் இருக்கிறது.

What's your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

pregnant women with tablets
ஆரோக்கியம்

கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் அமிலம் முக்கியம்? தினமும் எவ்வளவு தேவை?

கர்ப்ப காலத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பே வேண்டிய வைட்டமின்களில் முக்கியமானது தான் இந்த ஃபோலிக் ஆசிட்.ஃபோலிக் ஆசிட் ...
okra
ஆரோக்கியம்

ஓக்ரா தண்ணீர் எப்போது குடிக்கலாம் ஆராய்ச்சி என்ன சொல்கிறது

ஓக்ரா என்றால் வெண்டைக்காய். வெண்டைக்காயை 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரைக் குடிப்பதால் நிறைய நன்மைகள் உள்ளது என்கின்றனர். ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

சர்க்கரை நோய் பரிசோதனை எப்போது செய்யணும்?

உலக மக்களில் பலருக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். டயாபட்டீஸ் என்பது இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது உற்பத்தியாகும் ...
ஆரோக்கியம்

சரும அழகை போற்றி பாதுகாக்க டிராகன் பழம்!

பழங்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துபவர்களுன் கண்ணை கவர்வது டிராகன் பழம். அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ...
ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தத்தை எப்படி கட்டுப்படுத்தலாம்?

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிகள்: உடற்பயிற்சி:ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த அழுத்த அளவை குறைக்கிறது குறிப்பாக ஆண்களுக்கு ...