
குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் வரை தாய் சேய் இருவரது பராமரிப்பும் மிக மிக முக்கியம். உடல் ஆரோக்கியம் போன்று மன குழப்பமான மனநிலையை தாய் கொண்டிருப்பார்கள். பிரசவித்த பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்துக் கொண்டாலும் தாய்மார்களுக்கு இதை கடந்து வருவது மிகவும் சவாலான காலகட்டம் தான். முதலில் பிறந்த குழந்தையை எப்படி கவனித்து கொள்வது என்ற குறிப்புகளை அறியலாம்.
- நகம் வெட்டுவது:
பிறந்த குழந்தைகளுக்கு நகம் மிகவும் சீக்கிரமாக வளரும். இதனால் விளையாடும் போது முகம் மற்றும் உடலில் குழந்தைகள் அசைவுகளின் மூலம் கிழித்து கொள்வார்கள். இவர்களுக்கு நகம் மிகவும் மிருதுவாக இருப்பதால் பொறுமையாக குழந்தைகள் தூங்கும் போது வெட்டவும். மிகவும் ஆழமாக வெட்டவோ அல்லது ஓரத்தில் வெட்டினால் வலியும் உள்ளே நகம் வளரவும் செய்கிறது.
- மசாஜ்:
குழந்தைக்கு மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தையும் சீராக்குவதால் குழந்தை நிம்மதியாக தூங்க உதவி செய்யும். கையில் எண்ணெய் அல்லது லோஷன் வைத்து பொறுமையாக தேய்த்து விடவும். மசாக் செய்யும் போது குழந்தை கண்களை பார்த்து அவர்களுடன் பேச தொடங்குங்கள். குளிப்பதற்கு முன்னால் மசாஜ் செய்வது நல்லது.
- குளியல்:
மிகப்பெரிய சவாலான செயல் இது. 2500 கிராம் அதிக எடை உள்ள குழந்தைகளுக்கு பிறந்து 2-6 நேரத்தில் குளிப்பாட்டுவார்கள். எடை குறைவாக குழந்தைகளுக்கு தொப்புள்கொடி விழும்வரை காத்திருப்பார்கள். இது வறண்டு விழுவதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம்.
தூங்க வைப்பதற்கு முன்பு குளிக்க வைத்தால் குழந்தைக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும். குளிப்பதற்கு தேவையான பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்.குழந்தையின் சருமம் மென்மையானது என்பதால் கவனம் அவசியம்.
குளிக்க வைத்த பிறகு மூக்கை சுற்றியுள்ள சளியை மிருதுவான டவல் அல்லது துணி வைத்து பொறுமையாக எடுக்கவும். நன்றாக துடைத்து லோஷன் போடவும்.
- பாலூட்டுவது:
சரியான நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியமானது. பிறந்த குழந்தைகளுக்கு 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்கவும். முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய் பாலில் மட்டுமே குழந்தைக்கு தேவையான் எதிர்ப்பு சக்திகள், ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.தாய்ப்பாலூட்டும் நிலைகள் பற்றி அறிந்து கொண்டு பால் கொடுக்க வேண்டும். மார்பின் காம்புகள் குழந்தையின் வாய் சரியான நிலையில் வைத்திருந்தால் தான் பால் கிடைக்கும். இதை கவனித்து பால் கொடுக்க தொடங்குங்கள்.
பால் கொடுத்த பின் தாயின் மார்பு லேசாக உணர வேண்டும். இதுவே குழந்தைக்கு தேவையான பால் கிடைத்ததற்கான அறிகுறியாகும்.
- ஏப்பம்:
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது காற்றும் சேர்த்து விழுங்குவார்கள். வயிற்றில் வாயு மற்றும் பெருங்குடலில் வலி ஏற்படுத்துகிறது. ஏப்பம் விடுவதால் இந்த காற்று வெளியேறி ஜீரணத்தை சீராக்குவதால் துப்புதல் மற்றும் வயிறு வலியை தடுக்கும்.
ஏப்பம் வரும் போது குழந்தையை உங்கள் மார்பில் சாய்த்தவாறு பிடித்துக்கொளவும். தூக்கும்போது குழந்தையில் தாடை உங்கள் தோள்பட்டையில் இருக்க வேண்டும். பொறுமையாக தட்ட வேண்டும்.
- குழந்தை பிடிக்க வேண்டிய முறை:
குழந்தையை தூக்கும்போது கழுத்து பகுதியை ஒரு கையிலும் தலையை இன்னொரு கையிலும் பிடித்து கொள்ள வேண்டும். தலையை எவ்வித பிடிப்பும் இல்லாமல் இருக்க குழந்தையின் கழுத்து தசைகள் வலுவில்லாமல் இருக்கும். முதுகெலும்பும் அப்போது தான் வலிமையாக வளர்ந்து கொண்டிருக்கும். 3 மாதம் கழித்து தலையை தாங்கும் அளவிற்கு கழுத்து தசைகள் வளர்ந்திருக்கும்.
- குழந்தை தூக்கும் போது:
குழந்தையை வேகமாக ஆட்டுவதால் உடல் உறுப்புகள் சேதமடையும். தூக்கி பிடித்து விளையாடுவது மிகவும் அபாயமானது. குழந்தையை தூக்குவதற்கு கை கால்களை சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். வெளியே செல்லும் போது பத்திரமாக அமர வைத்திருக்கிறீர்களா என்று உறுதிபடுத்திக் கொள்ளவும். சிறிது நேரத்திற்கு வயிற்றில் படுத்துக்கொள்ள விடுவதால் முதுகெலும்பு கழுத்து தசைகள் வலிமையாவதோடு பார்வையும் மேம்படும், ஏனென்றால் இப்போது தலையை தூக்கி பார்ப்பதால் பார்வை மேம்படும்.
- தூக்கம்:
முதல் இரண்டு மாதத்திற்கு குழந்தை 16 மணி நேரம் தூங்க வேண்டும். சில நேரத்தில் சிறுநீர் கழித்தாலோ, பசித்தாலோ நடுவில் எழுவார்கள். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாலூட்ட வேண்டும். தூங்கினாலும் எழுப்பி பால் கொடுப்பதை தவிர்க்காதீர்கள்.
குழந்தையில் தூக்க நிலை எல்லா குழந்தை போல் இல்லை என்றால் வருத்தப்பட வேண்டால். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான தூங்கும் நிலையை வைத்திருப்பாட்கள். தூங்கும் போது அவ்வபோது தலையை பொறுமையாக் திருப்புவதால் தலையில் தட்டையான் புள்ளிகள் வராது. தாய்மார்களும் குழந்தை தூங்கும் போது தூங்க வேண்டும்.
- தொப்புள்கொடி:
குழந்தை பராமரிப்பில் தாய்மார்கள் செலுத்த வேண்டிய முதல் கவனம் தொப்புள்கொடி தான். தொப்புள்கொடி விழுந்தபின் 2-6 மணி நேரம் கழித்து தான் குளிக்க வைக்க வேண்டும். தொப்புள் பகுதியை தொடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். டயாபர் போடுகிறீர்கள் என்றால் தொப்புள் பகுதிக்கு கீழே போட வேண்டும்.
தொப்புளை சுத்தம் செய்ய சுத்தமான உறியும் திறன் கொண்ட துணியை பயன்படுத்தவும். தொப்புளை சுற்றி வீக்கம், சிவப்பு நிறம், சீழ், துர்நாற்றம் வெளியேறுதல், இரத்தம் வந்தாம் உடனடியாக் மருத்துவரிடன் அழைத்து செல்லுங்கள்.
- டயாபர்:
டயாபரை அவ்வப்போது மாற்றுவதால் தொற்று ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைக்கு தேவைப்படும் தாய்ப்பால் கிடைத்தால் 6-8 டயாபர் ஒரு நாளைக்கு தேவைப்படும். சில நாட்களில் 10 டயாபர் கூட தேவைப்படலாம்.
டயாபர் மாற்றும் போது மிருதுவான துணியால் துடைத்து பவுடர் போட்டு மாற்றவ்வும். பெண் குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று வராமலிருக்க பின்பக்கத்திலிருந்து முன் பக்கம் துடைப்பதற்கு பதில் முன்பக்கத்தில் இருந்து பின் பக்கம் துடைக்கவும். சில நாட்களில் டயாபர் இல்லாமலும் இருக்க விடுங்கள்.
