
புண்ணிய தளங்களில் ஒன்றான பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பகவானின் ஆசி பெறுகின்றனர். எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு ஜெகன்நாதராகவும் அவரது தங்கை சுபத்திரை மற்றும் அண்ணன் பலராமருடன் காட்சி தருகிறார்.
அறிவியலை கடந்து இன்னும் விளக்கம் கண்டறியப்படாத கேள்விகள் புதிர்கள் உள்ளன. பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் வியப்படையும் இந்த திருத்தலத்தின் விளங்கா புதிர்கள்:
கடல் காற்று:
எப்போதும் காலை வேளையில் கடலிலிருந்து காற்று நிலத்தை நோக்கி வீசும், மாலையில் நிலத்திலிருந்து காற்று கடலை நோக்கி வீசும், ஆனால் பூரியில் உள்ள கடற்கரையில் இவை மாறும். காலையில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் மாலையில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும் காற்று வீசும்.
பிரசாதம்:
இலட்சக்கணக்கான பக்த்ர்கள் பகவானின் ஆசி பெறுகிகின்றனர். அவர்களுக்கு தயாரிக்கப்படும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தயாரிக்கப்படுகிறது. உணவு வீணாகாமலும் பற்றாக்குறையாகவும் இல்லாமல் சரியாக சமைக்கப்படுகிறது.
மேலே ஏதும் பறப்பதில்லை:
மரத்திலோ அல்லது கோயிலின் மேற்பரப்பில் பறவை, விமானம் என ஏதும் பறப்பதில்லை. இதற்கான அறிவியல் காரணங்கள் கண்டறிய முடியவில்லை.
பிரசாதம் தயாரிக்கும் முறை:
பிரசாதம் ஏழு மண்பானைகளில் சமைக்கப்படுகிறது. இந்த ஏழு பானைகளும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அடுப்பில் தயாரிக்கப்படும். மேலிருக்கும் பானையில் உள்ள பிரசாதமே முதலில் தயாராகும். தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது கடைசியாகவே கீழிருக்கும் பானை உணவு தயாராகிறது.
கடல் அலைகள்:
கடற்கரைக்கு அருகில் இருக்கும் கோயில் உள் சென்றவுடன் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை. புராணக் கதையாக சுபத்திரை இந்த கோயில் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அலைகளின் சத்தம் கேட்பதில்லை என்று கூறப்படுகிறது.
சக்கரத்தின் திசை:
கோயிலின் மேலே டன் எடையுள்ள சக்கரம் இருக்கிறது. எங்கிருந்து இந்த சக்கரத்தை பார்த்தாலும் சக்கரம் தன்னை நோக்கி பார்ப்பது போலவே உள்ளதாம். இக்கோயிலின் மேல் எப்படி அவ்வளவு பெரிய கல் மேலே வைக்கப்பட்டது என்றும் புரியவில்லை.
மரத்தால் ஆன சிலைகள்:
கோயிலில் சிலைகள் பொதுவாக கற்களில் செய்யப்படும். ஆனால் இங்கு மரத்தால் செய்யப்படுகிறது. 8,12,19 வருடங்களுக்கு ஒருமுறை இங்கு புனிதமான வேப்பிலை மரங்களை கொண்டு 21 நாட்களில் மூலவர்களை தயார் செய்கிறார்கள். இதை நபகலே பரா என்று அழைப்பார்கள், இறுதியாக 2015-இல் புதிய மூலவர்கள் செய்யபட்டனர்.
தேர்:
உலகத்திலேயே மிகப்பெரிய தேர் திருவிழா ஜெகன் நாதரின் திருவிழா ஆகும். இதற்கான தேரை எவ்வித அறிவியல் கணக்கு இடமால கையாலே கணக்கிட்டு சிறப்பாக செய்கிறார்கள்.
கொடி பறக்கும் திசை:
கோயிலில் மேல் பறக்கும் கொடி காற்றுக்கு எதிர் திசையில் பறக்கிறது. தினமும் எவ்வித பிடிப்பும் இல்லாமல் வெறும் கைகளை பயன்படுத்தி சிகரத்தை அடைந்து இந்த கொடியை மாற்றுவார்கள். ஒரு நாள் தவற விட்டாலும் 18 வருடங்களுக்கு கோவில் மூடப்படும் என கூறப்படுகிறது. 1800 வருடங்களாக தவறாமல் கொடியை மாற்றுகிறாக்ர்கள்.
டெக்னாலஜி இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தாலும் பகவான் போட்ட முடிச்சுகளை அவிழ்க்க தவறிக்கொண்டு தான் இருக்கிறது.
