
குறைந்த கிளைசெமிக் உணவுகள்
சமீபத்தில் வந்த ஆய்வுகளின் படி குறைந்த கிளைசெமிக் உணவுகள் எடுத்துகொள்வது முகப்பருவை தடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறைந்த சர்க்கரை உள்ள உணவுகள் முகப்பருவை தடுக்கலாம். 2012 ஆம் ஆண்டு கொரிய மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைந்த கிளைசெமிக் உணவு எடுத்துகொள்வது முகப்பரு இல்லாமல் வைக்க செய்கிறது.
American Academy of Dermatology Trusted Source https://pubmed.ncbi.nlm.nih.gov/17448569/ 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் 12 வாரங்கள் குறைந்த கிளைசெமிக் அதிக புரதம் கொண்ட உணவை எடுத்துகொண்ட ஆண்களுக்கு முகப்பருவை மேம்படுத்துவது எடை இழப்பும் உண்டு செய்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். இது இறுதியானது அல்ல இன்னும் தற்போதைய ஆய்வுகள் தேவை.
ஸ்வீட் கார்ன், வாழைப்பழம், கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகள்.
துத்தநாகம்
துத்தநாகம் நிறைந்த உணவுகள் முகப்பருவை தடுக்க சிகிச்சையளிக்க உதவும் என்று ஆய்வு https://pubmed.ncbi.nlm.nih.gov/17448569/தெரிவிக்கிறது. பூசணி விதைகள், முந்திரி, பருப்பு மற்றும் அசைவ உணவில் சிப்பி, நண்டு, மாட்டிறைச்சி, வான்கோழி போன்றவை முகப்பரு தீவிரம் குறைத்தது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தார்கள். இது முகப்பரு இல்லாமல் வைத்திருக்கவும் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் அளவை கட்டுப்படுத்தவும் கூட உதவுகிறது.
உடலில் துத்தநாகம் அளவு குறையும் போது முகப்பருவின் கடுமையான நிகழ்வுடன் தொடர்புடையது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறீந்துள்ளனர். கடுமையான முகப்பரு இருந்தால் உணவில் துத்தநாகம் சேருங்கள்.
வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ
Journal of Cutaneous and Ocular ToxicologyTrusted Source, கூற்றுப்படி குறைந்த அளவு வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவை முகப்பருவின் கடுமையான நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் மக்கள் முகப்பரு தீவிரத்தை குறைக்க முடியும்.
விலங்கு கல்லீரல், சால்மன் மீன், டுனா மீன், வெண்ணெய், சீஸ், முட்டை ஒய்ஸ்டர்ஸ், இனிப்பு உருளைகிழங்கு, காலே, நூல்கோல், கேரட், கீரைகள்.மாம்பழம், க்ரேஃப்ரூட், தர்பூசணி, பப்பாளி, ஆப்ரிகாட்.
ஒமேகா 3 மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என்பது சில தாவரங்கள் மற்றும் மீன் மற்றும் முட்டை போன்ற விலங்கு- புரத மூலங்களில் காணப்படும் கொழுப்பு. ஆன் டி ஆகிஸ்டட்ன்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நடுநிலையாக்கும் இராசயனங்கள். மேலும் ஒமேகா 3 மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தை குறைக்கும
ஒமேகா- 3 மற்றும் ஆக்ஸிஜனேற்ற நுகர்வு அதிகரிப்பதற்கும் முகப்பரு குறைவதற்கும் இடையேயான தொடர்பை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. Studies in 2012Trusted Source and 2014Trusted Source -ல் நடத்தப்பட்ட ஆய்வுகள் தினசரி ஒமேகா -3 மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட் சப்ளிமெண்ட் எடுத்துகொண்டவர்கள் முகப்பருவை குறைத்து, அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இது சால்மன் மீன்,ஓய்ஸ்டர்ஸ்,ஆளி விதை, சியா விதை, வால்நட், சோயா உணவுகள் போன்றவற்றில் காணப்படுகின்றன.
இதெல்லாம் சாப்பிட்டா முகப்பருவும் போகும். மற்ற ஆரோக்கியமும் வரும். ஆனா தொடர்ந்து ஃபாலோ பண்ணனும், வேறு காரணத்தால முகப்பரு வந்தா உங்க டாக்டர் கிட்ட செக் பண்ணுங்க!
