
மூளை கட்டி என்பது அரிதாக வரக்கூடிய நோய். இது பலவகைகளில் வரலாம். மூளை அல்லது முதுகுத்தண்டுவடத்தில் இதன் தொடக்கம் இருக்கலாம். இந்த கட்டிகள் மெதுவாக அல்லது வேகமாக வளரும் திறன் பொறுத்து இந்த நோயின் அறிகுறிகள் மாறுபடலாம். மூளை கட்டிகளில் நிறைய விதங்கள் உள்ளன.
மூளை கட்டிகளின் விதங்கள்:
benign: மூளையில் கட்டி வருவது பிரச்னை என்றாலும் இவை பொறுமையாக வளர்ந்து அவ்வளவு எளிதில் மற்ற திசுக்களுக்கு பரவாமல் இருக்கும். எல்லைகள் ஏதும் இல்லாததால் இவற்றை சர்ஜரி மூலம் எடுப்பது எளிமையாகவும் திரும்பி வராமலும் இருக்கும்.
malignant: இவ்வகை கட்டிகள் வேகமாக வளர்ந்து மூளையின் மற்ற பகுதி, நரம்பு மண்டலங்களுக்கு பரவ தொடங்கி ஆபத்துகளை விளைவிக்கும்.
மூளையிலிருந்து தொடங்கும் கட்டிகள் ப்ரைமரி (primary)கட்டிகள் எனவும் மற்ற உடல் பகுதிகளிலிருந்து பரவிய கட்டிகளுக்கு செகண்டரி (secondary) எனவும் கூறுவார்கள்.
எச்சரிக்கை அறிகுறிகள்:
மூளை கட்டிகளின் அறிகுறிகள் மாறுபடலாம். அவை வகை, கட்டிகளின் அளவு, இடம் பொறுத்து மாறுபடும்.
- தலைவலி
- வலிப்பு தாக்கங்கள்
- பார்வை, வாசனை, கேட்கும் திறன் உணர்ச்சி மாற்றங்கள்
- தூங்குவதில் சிரமம்
- நினைவு பிரச்னை
- சோர்வு
- குமட்டல்
- நடப்பதில் சிரமம்
- வாந்தி
- தினசரி வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படுவது,
- உடலில் ஏதோ ஒரு பக்கத்தில் பலவீனம்
இந்த அறிகுறிகள் மூளை கட்டிகளின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். அதனால் இதை தவிர்க்காமல் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று காரணத்தை அறிந்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மூளைக்கட்டிகளின் பொதுவான அறிகுறிகள்:
சோர்வு மற்றும் உணர்வின்மை:
மூளையில் கட்டி இருப்பதில் உடல் அதனுடன் போரிடுவதால் சோர்வு ஏற்படுகிறது. இதனால் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படுகிறது. தசைகளில் உணர்வின்மை அல்லது சோர்வு உடலில் ஏதாவது ஒரு பகுதியில் வருகிறது அல்லது மூளையில் உள்ள கட்டியையும் குறிக்கலாம்.
ஒருவேளை புற்றுநோய் சிகிச்சை எடுப்பதாக இருந்தால் அதன் பக்கவிளைவுகளாக கூட இருக்கலாம்.
குமட்டல் அல்லது வாந்தி:
கட்டி இருப்பதில் ஹார்மோன்களில் சமநிலை இல்லாமல் மூளைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. இதனால் ஆரம்ப நிலையில் நீங்கள் குமட்டல் வாந்தி எடுப்பீர்கள். புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி அல்லது வேறு சில சிகிச்சை எடுப்பதாலும் வரும் பக்கவிளைவாகவும் இருக்கலாம்.
வாந்தி எடுப்பது வேறு சில காரணங்களாக இருந்தாலும் மூளை கட்டியால் எடுக்கும் வாந்தி மற்ற காரணங்களை விட வித்தியாசமாக இருக்கும்.
மன அழுத்தம்:
மூளை கட்டி இருப்பதாக தெரிந்தவுடன் மன அழுத்தம் வருவது மிகவும் பொதுவானது. வழக்கத்தை விட மிகவும் சோர்வாக உணர்வது, முன்பு பிடித்த விஷயத்தில் ஆர்வமில்லாமல் போவது, தூக்கமின்மை, சோர்வு, குற்ற உணர்ச்சி, தற்கொலை செய்வது போன்ற எண்ணங்கள் இந்த மாதிரி நேரத்தில் வரக்கூடும். இது போன்ற எண்ணங்கள் வரும்போது உங்கள் மனதை தளர விடாமல் இருப்பது மிகவும் அவசியம்.
சோர்வு:
வழக்கத்தை விட அதிகமாக சோர்வாக உணர்வீர்கள். மிகவும் எரிச்சலடைவீர்கள், மிகவும் சோர்வாக உணர்வீர்கள், கை கால்கள் வலி, அவ்வபோது தூக்கம் போன்ற அறிகுறிகள் வரும்.
நினைவு பிரச்னை அல்லது குழப்பம்:
மூளையில் எந்த பகுதியில் கட்டி வந்தாலும் நினைவு வைத்து கொள்வதில் பிரச்னை ஏற்படும். ஆனால் குறிப்பாக முன்பகுதி அல்லத் தற்காலிக மடல்களில் கட்டி இருந்தால் கண்டிப்பாக வரும். இதனால் உங்களுக்கு முடிவு எடுக்கும் திறன் போன்றவற்றில் சிரமமாக இருக்கும்.
கவனம் செலுத்துவதில் கடினம் ஏற்படுவது, சிறிய விஷயங்களில் குழப்பம், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதில் சிரமம், திட்டமிடுவதில் சிரமம் ஏற்படும்.
மூளை கட்டியில் எந்த நிலையிலும் இவை வரலாம், அல்லது கீமோதெரப்பி மற்ற சிகிச்சை எடுப்பதாலும் பக்க விளைவு உண்டாகலம். ஆனால் இது உங்களுக்கு சீர்வை தீவிரப்படுத்து. வைட்டமின் பற்றாக்குறை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளாலும் அறிவாற்றலில் பிரச்னை வரலாம்.
வலிப்பு:
மூளையின் கட்டமைப்பில் இந்த கட்டிகள் அழுத்தத்தை கொடுப்பதில் வலிப்பு ஏற்படுகிறது. சில நேரத்தில் இதுவே முதல் அறிகுறியாக இருக்கலாம் ஆனால் எவ்வித நிலையிலும் இந்த பிரச்னை வரலாம். 50% மூளை கட்டியுள்ளவர்களுக்கு ஒரு முறையாவது வலிப்பு வருவதாக கூறப்படுகிறது trusted source
தலைவலி மாற்றங்கள்:
சென்சிடிவ் நரம்பு மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை மூளையில் உள்ள கட்டிகள் கொடுக்கும். மூளையில் இருக்கும் திரவத்தின் ஓட்டத்தை தடுத்து அழுத்தம் அதிகமாவதால் தலைவலி வருகிறது. இதனால் உங்களுக்கு வழக்கமாக ஏற்படும் தலைவலியில் மாற்றங்கள் அல்லது புதிய முறையில் தலைவலி வரலாம்.
தலைவலி அதிகமாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக வந்தால் அவை மூளை கட்டியின் அறிகுறிகள் மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கலாம்.
