
மைக்ரேன் என்பது தலைவலியை விட மிகவும் அதிகமாக வலிக்கும். இது அன்றாட விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் செய்யும். தீவிரமான நிலையில் இவை வரக்கூடியது என்றாலும் இதை கட்டுப்படுத்தவும் முடியும்.
மைக்ரேன் தலைவலி வகைகள்
மைக்ரேன் மொத்தம் நான்கு நிலை உடையது. அதில் முதல் நிலை மைக்ரேன். முன் ஒற்றைத்தலைவலி. இந்த அறிகுறிகள் வரும்போதே இதை தடுக்க முதலில் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
முதல் நிலையை ப்ரோட்ரோம் நிலை (prodrome stage) என்பார்கள். இதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் நமக்கு மைக்ரேன் வருகிறது என்பதை காண்பிக்க தொடங்கும். மைக்ரேன் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்று சொல்லிவிட முடியாது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அறிகுறிகள் தென்படலாம். இது ஒற்றைத்தலைவலி தாக்குதல் எற்படுவதற்கு சில மணி நேரங்கள் முதல் பல நாட்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
சில நேரங்களில் இவை முன் தலைவலி அல்லது முன் கணிப்பு என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஒற்றைத்தலைவலி தாக்குதலுக்கும் முன்பு உண்டாகாது. எனினும் இதை நுணுக்கமாக கண்டறிவது முந்தைய அறிகுறிகளை அடையாளம் காண கற்றுகொள்வது, வலி உபாதையை தடுக்க உதவும். அதே நேரம் மைக்ரேன் கொண்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இல்லை என்பது முக்கியம். மைக்ரேன் முதல் வகையில் இருக்க கூடிய பொதுவான அறிகுறிகள்.
அறிகுறிகள்:
mood swings- மனநிலை அவ்வபோது மாறிக் கொண்டே இருக்கும். திடீரென்று சோகமாக இருப்பீர்கள், மன அழுத்தமாக இருக்கும், எந்த காரணமும் இல்லாமல் எரிச்சலடைவீர்கள். தனிமையை விரும்பிவீர்கள். மனநிலை ஒரே மாதிரி இருக்காது.
கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படும் பொதுவாக அறிகுறியாகும்.
மைக்ரேன் வருவதற்கு முன்பு பசியை தூண்டும் குறிப்பாக இனிப்பு பொருட்களை சாப்பிட தோன்றும்.
ஒருமனதாக எந்த வேலையும் செய்ய முடியாது, குழப்பத்துடனே இருப்பீர்கள். எதிலும் கவனம் செலுத்த முடியாது.
இரவு நல்ல தூக்கம் இருந்தாலும் காலையில் சோர்வாகவே இருப்பீர்கள். மறுநாள் பொழுது முழுவதும் ஆற்றல் இல்லாமல் இருப்பீர்கள். மந்தமாக இருக்கும்.
வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கொட்டாவி விடுவதும் ஒருவித அறிகுறி. தூக்கம் இருந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்.
அஜீரணக் கோளாறால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிப்பது கூட இதன் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
