
போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
தினமும் 3 லிட்டர் அளவு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். நீரிழப்பு வறண்ட மந்தமான செதில்கள் போன்று சருமத்தை உண்டு செய்யும். இவை தான் தடிப்பு தோல் அழற்சி போன்ற நிலைமைகளை உண்டு செய்யும்.
அதிகமான உடற்பயிற்சி, தீவிர வேலையில் இருப்பவர்கள். வறட்சியான இடத்தில் இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் தவிர்க்க கூடாது. எலுமிச்சை, நீர் மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
உணவில் கவனம் செலுத்துங்கள்
ஆரோக்கியமான உணவுகள் அவசியம். தோல் ஆரோக்கியமாக அழகாக இருக்க ஊட்டச்சத்துக்கள் தேவை. இது மேல் தோலின் ஒட்டுமொத்த நிலை மற்றும் தோற்றம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை உண்டு செய்ய்லாம்.
பருவகால பழங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள் தானியங்கள் போன்றவற்றை தினமும் ஏதாவது ஒரு வகையில் சாப்பிடுங்கள்.
போதுமான தூக்கம்
நாள் ஒன்றுக்கு 8 மணி நேர தூக்கம் இருந்தால் தான் மருநாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். தூங்கும் போது தான் உறுப்புகள் தன்னைத்தானே புதுப்பித்துகொள்ளும். ஆனால் தூக்கம் சரியாக இல்லையெனில் மந்தமான நிறம், வீக்கம் மற்றும் கண்களுக்கு கீழ் கருப்பு வட்டங்கள் உண்டாகலாம். நல்ல தூக்கம் கடைபிடியுங்கள்
சுகாதாரமாய் சுத்தமாய் இருங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை குளியல் அவசியம். அடிக்கடி முகத்தை சுத்தம் செய்யுங்கள். தோலுக்கு சூடான நீர் தவிருங்கள். இது முகத்தை உலர்வாக வைக்கலாம். இயற்கையாக சுரக்கும் எண்ணெயை கட்டுப்படுத்தலாம். தோலை சுத்தம் செய்கிறேன் என்று வாசனை மிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம்.
வெயிலில் செல்லும் போது
வெயிலில் செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். அதனோடு கண்களுக்கு கண்ணாடி அவசியம். அதிக வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தாலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். வெளியில் செல்வதாக இருந்தால் 20 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். இந்த டிப்ஸ் ஃபாலோ செய்தாலே வெயிலும் ஜில்லுன்னு இருக்கும்.
