
ஹாட் சம்மரை கூலாக்கும் உணவு
தினமும் 3 லிட்டர் தண்ணீர் எடுப்பதை அவசியமாக வைத்திருங்கள். உடல் 60% தண்ணீரால் ஆனது. கோடையில் வியர்வை வழியாக வெளியேறும் தண்ணீரின் அளவை சமன் செய்ய அவ்வபோது தண்ணீர் குடியுங்கள். ஃப்ரிட்ஜ் தண்ணீர் வேண்டாம்.
சீரக தண்ணீர், தனியா தண்ணீர், அன்னாசிப்பூ தண்ணீர், ஸ்ட்ராபெர்ரி தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், பானகம், பானை தண்ணீர் என்று சுவையாக குடித்தால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தண்ணீர் போன்று திரவ ஆகாரங்கள் அவசியம். மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை தவிர்க்காமல் சேருங்கள்.
இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்கள், அமினோ ஆசிட், தாதுக்கள் உள்ளதால் கோடைக் காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் டாக்டரிடம் ஆலோசித்து இளநீர் பருகுவது நல்லது.
முதலில் சரியான நேரத்தில் உணவு எடுத்துகொள்ளுங்கள். உணவில் நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், முள்ளங்கி, புடலங்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் போன்றவை அதிகம் இருக்கட்டும். அதோடு வயிற்று கோளாறுகள், அல்சர் போன்ற பிரச்சனைகள் தலைதூக்காமல் இருக்கவும் செய்யும். உடல் நீரேற்றத்தோடு இருந்தால் தான் உறுப்புகள் தங்கள் பணியை சீராக செய்ய முடியும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சாலட் போல சாப்பிட்டால் அதில் இருக்கும் அத்தனை வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து வெப்பத்தை தணிப்பதைக் காட்டிலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவி செய்யும். ஜுஸ்க்கு பதிலாக பழங்களை அப்படியே நறுக்கி சாப்பிடுங்கள்.
ஹாட் சம்மரில் உங்களை ஹாட்டாக வைத்திருக்கும் உணவுகள்
காரம் அதிகமாக இருக்கும் உணவுகளை விரும்பி சாப்பிட்டால் வெயிலுக்கு இன்னும் வயிறு எரிய தொடங்கும். அதனால் தவிர்ப்பதே நல்லது.
ஜில்லென்ற செயற்கை இனிப்பு பானங்கள் நாக்குக்கு நல்லது ஆனால் உடலுக்கு கேடானது.
எண்ணெயில் பொரித்த உணவுகள் வறுத்த உணவுகளுக்கு நாம் அடிமையாக இருக்கலாம். ஆனால் வெயிலில் இவை செரிமானத்தை பதம் பார்த்துவிடும்.
கண்ணுக்கு குளிர்ச்சி தரும் செயற்கை சுவையூட்டலுடன் கூடிய உணவுகள் சேர்க்க வேண்டாம்.
காஃபி, டீ, எனர்ஜி பானங்கள் அவசியமெனில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை போதும். மற்ற நேரங்களில் தவிருங்கள்.
கறுக் மொறுக் ரெசிபிகளை அருகில் சேர்க்காதீர்கள். வயிறு கடா முடா சத்தம் போடலாம்.
