Uncategorized

+2 முடித்தவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் பயின்ற +2 மாணவ மாணவியருக்கான பொதுத்தேர்வு முடிவுகள், மாணவ மாணவியர் எடுத்துள்ள மதிப்பெண்கள் பற்றிய புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களால் உயர்கல்வி சேர்க்கையில் ஏற்பட உள்ள சிற்சில மாற்றங்கள், பல துறைகளில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய விளக்கங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய இன்றியமையா தேவை உள்ளது. 

தமிழக அரசால் உயர்கல்விக்கான கையேடு வெளியிடப்பட்டு, மாணவர்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையினரின் ஒத்துழைப்போடு, உயர்கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்விக்கண்காட்சிகள் மாநிலம் தோறும் நடைபெற்றுள்ளன. இருப்பினும், தாங்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த கல்லூரி சிறந்தது? எந்த படிப்பிற்கு எதிர்க்கலாம் சிறப்பாக உள்ளது? என்பன போன்ற பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் பெற ஒவ்வொரு மாணவரும் அவர்தம் பெற்றோரும் விரும்புகின்றனர்.  

உயர்கல்வித்துறையில் பல முக்கிய மாறுதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டுள்ளன. எல்லா துறைகளிலும் பல புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன. புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்க மாணவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவுவதை காணமுடிகிறது. 

குறிப்பாக, கணித பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்த மாணவர்கள், கணினி சார்ந்த பொறியியல் மற்றும் தொழில் நுட்பப்படிப்புகளான, Artificial Intelligence, Data Science, Machine Learning, Big Data Analytics, Internet of Things, Cyber Security, Block Chain Technology, Robotics & Automation படிப்புகளையும், Aero Space, Medical Electronics, Bio-Technology, Bio Medical, Food Technology, Petroleum, Petro Chemical, Plastic Technology, Geo Informatics, Marine போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படிப்புகளையும் படிக்க ஆர்வத்துடன் உள்ளனர்.

 

இத்துடன், அடிப்படை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளான Civil Engineering, Mechanical Engineering, Chemical Engineering, Electrical Engineering சார்ந்த படிப்புகளை விரும்பி படிக்கின்ற மாணவர்களையும் காணமுடிகிறது. 

தமிழக அரசு நடத்திய/ நடத்தப்போகிற பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தமிழகத்தில் இயங்கி வருகிற மத்திய அரசின் 3 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


  1. Central Electrochemical Research Institute (CECRI), Karaikudi

  2. Central Institute of Petrochemical Engineering and Technology (Formerly Central Institute of Plastics Engineering and Technology – CIPET), Chennai

  3. Indian Institute of Handloom Technology, Salem

சமீப காலமாகவே பொறியியல் படிப்புகளுக்கு இணையாக B.Arch மற்றும் B.Des ஆகிய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கு ஏற்றார்போல தமிழகத்தில் பல கல்லூரிகள், B.Des படிப்புகளை துவங்கியுள்ளன. இந்த படிப்பின் சிறப்பு உட்பிரிவுகளான (Specialization), Communication Design, Animation & Film Design, Exhibition Design, Industrial Design, Ceramic & Glass Design, Furniture & Interior Design, Product Design இவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மாணவர்கள் படிக்கலாம்.

உயிரியல் (அ) தாவரவியல் & விலங்கியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு படித்த மாணவர்கள்,  நீட்(NEET) தேர்வு தேவைப்படாத,  துணை மருத்துவப்படிப்புகளான Pharmacy, Optometry, Nursing, Cardiac Technology, Cardio-Pulmonary Perfusion Technology, Cardio Technology, Operation Theatre & Anaesthesia Technology, Accident & Emergency Care Technology, Radiography And Imaging Technology ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர். 

வணிகவியல் (Commerce) பாடத்தில் பலவித சிறப்பு உட்பிரிவுகளை (Specialization) எடுத்து படிப்பதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கு உள்ளது. Accounting & Finance, Bank Management, Business Process Services (BPS), E-Commerce, Foreign Trade போன்ற உட்பிரிவு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. பொருளாதாரம் (Economics) படிப்பை படிக்க உள்ள மாணவர்களுக்கு தன்னிகரற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.  

 

வணிக மேலாண்மை (BBA) பாடத்தில் சிறப்பு உட்பிரிவுகளான (Specialization) Logistics, Shipping & Logistics, International Business, Entrepreneurship, Business Analytics, Strategic Management போன்ற இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

தமிழகத்தில் மாணவர்கள் வசிக்கும் நகர/மாவட்ட பகுதிகளிலேயே உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கிட மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

– விழிப்புணர்வூட்டுவோம்….

 

S.சித்தார்த்தா, 

வழிகாட்டி – உயர்கல்வி ஆலோசகர்,

(Mentor-Career Guidance) 

Galaxy Edu Services

Contact: 94451 06661

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

இன்றைய ராசி பலன்
Uncategorized

இன்றைய ராசிபலன் 11 ஜனவரி சனிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன்
Uncategorized

இன்றைய ராசிபலன் 22 நவம்பர் வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன்
Uncategorized

இன்றைய ராசிபலன் 18 நவம்பர் திங்கட்க்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 07 அக்டோபர் திங்கட்க்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...
இன்றைய ராசி பலன் Uncategorized

இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, ...