pengal.

pengal.

Get In Touch

வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்ணலாமா?

வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்ணலாமா?

வெஸ்டர்ன் டாய்லெட். இதுதான் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளது. குந்துக்கால் போடாமல் உட்கார்ந்துகொண்டே மலம் கழிக்க உதவும் கழிப்பறை வகை இது. வீடுகளில் மட்டும் அல்லாமல் மருத்துவமனைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் கழிப்பறைத்தான் பயன்படுத்தப்படுகிறது. வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்ணலாமா? என்ன கவனிக்கணும்? யாரெல்லாம் யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதன் நன்மைகள்
வெஸ்டர்ன் டாய்லெட் வயதானவர்களுக்கு நல்லது. முழங்கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு நமது பாரம்பரியமான இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து உட்கார்வது, எழுவது கடினமாக இருக்கும். இவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் தான் ஏற்றது.
நடப்பதில் சிரமம் உள்ளவர்கள், உடல் இயக்கக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் சில அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இருப்பவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வசதியாக இருக்கும். தேவைக்கேற்ப கைப்பிடிகள், உயர்ந்த இருக்கை என்று வைக்கலாம். 

குத்தவைத்து அமர்வதால் முழங்கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டியவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் உதவியாக இருக்கும். குறிப்பாக மூட்டு இயக்கத்தில் கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு இந்த கழிப்பறை நல்லது. சரியான முறையில் பொருத்தப்பட்ட வெஸ்டர்ன் டாய்லெட்டை சுத்தம் செய்வது எளிது என்றாலும் இருக்கை, ஃப்ளஷ் பகுதி, தரை ஆகியவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்வது அவசியம்.
உயர்த்தப்பட்ட இருக்கை, கைப்பிடிகள், ஆதரவுக் கம்பிகள் போன்ற வசதிகளைச் சேர்த்து தனிநபரின் தேவைக்கேற்ப கழிப்பறையை அமைக்க முடியும் என்பதாலேயே இன்று பலரின் சாய்ஸாக வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கிறது. ஆனால் இதன் நன்மைகள் எல்லோருக்கும் ஆனதல்ல. 

வெஸ்டர்ன் டாய்லெட்  பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள்
ஏனெனில் வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காரும்போது, குத்தவைத்து அமரும் நிலையைவிட மலக்குடல் மற்றும் ஆசனவாய் இடையிலான கோணம் குறைவாக மாறும். இதனால் உடலில் இருக்கும் மலம் வெளியேற அதிக முயற்சி தேவைப்படலாம்.
குறிப்பாக மலச்சிக்கல் உள்ளவர்கள் மலம் கழிக்கும்போது அதிகமாக முக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீண்ட நேரம் உட்கார்வது, முக்குவது, அதிக அழுத்தம் கொடுப்பதும் மூலநோய் பிரச்னைகளை அதிகரிக்கும். 

மேலும் பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தும்போது கிருமிகள் அதன் மீது இருக்கலாம் என்பதால் தொற்று அதிகரிக்கும்.
வெஸ்டர்ன் டாய்லெட்டை அமைக்கும்போது கழிப்பறையின் அளவு, கதவு திறக்கும் இடம், பயன்படுத்துபவரின் உடல் இயக்க வசதி என இடம் தேவையும் அதிகமாக இருக்கும். இதுவும் ஒருவகையில் சிக்கல். 

வெஸ்டர்ன் டாய்லெட் யாருக்கு?
  • வயதானவர்கள் மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள்.
  • இடுப்பு, முதுகு அல்லது மூட்டு இயக்கத்தில் சிரமம் உள்ளவர்கள்.
  • உடல் இயக்கக் குறைபாடு கொண்டவர்கள்.
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு குத்தவைத்து அமரக் கூடாது என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டவர்கள்.
  • சமநிலை இழப்பதால் கீழே விழும் அபாயம் உள்ளவர்கள்.
வெஸ்டர்ன் டாய்லெட்  பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவர்கள்
மலம் கழிக்கும்போது சிரமம் இருந்தால், கால்களுக்குக் கீழே சிறிய ஸ்டூல் வைத்து முழங்கால்களை இடுப்பைவிட உயர்த்தி உட்கார வேண்டும். முன்னோக்கிச் சற்றுச் சாய்ந்து, வயிற்றைத் தளர்வாக வைத்துக்கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாகும்போது கழிப்பறையில் அமர்வதும் எழுவதும் சிரமமாக இருக்கும். விழுந்துவிடாமல் இருக்க கைப்பிடி போன்ற ஆதரவு ஏற்படுத்த வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 
முழங்கால், இடுப்பு அல்லது முதுகுப் பகுதியில் வலி இருப்பவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வசதியாக இருக்கலாம். எனினும், சரியான உயரம் அவசியம். 

வெஸ்டர்ன் யூஸ் பண்ணும்போது இதையும் கவனிங்க
கால்களை உயர்த்தி உட்கார வேண்டும்.  கால்களுக்குக் கீழே சிறிய ஸ்டூல் வைத்து முழங்கால்களை இடுப்பைவிட உயர்த்துவது மலம் கழிப்பதை எளிதாக்கும். முன்னோக்கிச் சற்றுச் சாய்ந்து முழங்கால்களின் மீது கைகளை வைத்துக்கொண்டு உடலைத் தளர்வாக வைத்துக்கொள்ளலாம்.
அதிகமாக முக்காமல் மலம் கழிக்கும்போது மூச்சை அடக்கிக்கொண்டு அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் உட்கார கூடாது.

Share:

pengal
Author

pengal