டீனேஜ் பிள்ளைகள் கொண்டிருக்கும் பெற்றோர்களில் பலருக்கும் கவலை தரும் விஷயம் பிள்ளைகளை கையாள்வது எப்படி என்பதுதான்.
நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை எதிர்த்து பேசுகிறார்களே என்ற சங்கடம் சிலருக்கு இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். நாமும் இவர்களது வயதை கடந்து வந்தவர்கள் தான். இளம்பருவத்தில் நாமும் இப்படித்தான் பெற்றோர்களிடம் நடந்து கொண்டிருப்போம் என்பதை மறந்துவிடக்கூடாது இன்றைய தலைமுறையிடம் கொஞ்சம் கூடுதலாக பார்க்கலாம்.
பெற்றோர் பிள்ளை உறவுகள்
சில வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வளர வளர இடைவெளி ஏற்படுவது இயல்பு. பிள்ளைகள் வளர்ந்து விட்டதையும் அறியாமல் அவர்களை குழந்தையாகவே எண்ணிக் கொண்டிருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் குறை கூறிக் கொண்டே இருந்தால் குழந்தைகள் பகிர்வதையே நிறுத்தி விடுவார்கள். மாறாக எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோரிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால்தான் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோர் பிள்ளை சச்சரவுகள்
இளம்பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவது சாதாரணமான விஷயம் தான். ஏனெனில் அவர்கள் வளரும்போது முடிவுகளை சுயமாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமாக அனைத்து விஷயங்களையும் செய்ய பழக நினைக்கிறார்கள்.
இந்தக் குழந்தைகளிடம் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. அவர்களிடம் அதிகாரமாக பேசினால் அவர்கள் அதையே செய்வேன் என்று உறுதியாக இருப்பார்கள். ஆனால் பொறுமையாக ஒரு விஷயத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தால் அது குறித்து யோசிப்பார்கள். அதே நேரம் அந்த விஷயத்துக்கு உங்களுக்கு ஏற்ப சாதகமாக பேசாமல் எது சரியானதோ அதைப்பற்றி பேச வேண்டும்.
இளம்பிள்ளைகளின் கருத்துக்களை மதித்தல்
பெற்றோர்கள் தாங்கள் செய்வதே சரி என்று பேசாமல் பிள்ளைகள் சொல்வதையும் கேட்க வேண்டும். அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்க கூடாது. சில நேரங்களில் அவர்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம். சிந்தித்து சரியாக இதற்கு முடிவெடுக்க வேண்டும்.
அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்
பதின்ம வயது பிள்ளைகளே என்றாலும் அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். வேலைப்பளுவை காரணம் காட்டி குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதை தவிர்க்க கூடாது. வேலையில் இருந்து திரும்ப வந்ததும் ஓய்வெடுக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை முடிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது.
முக்கியமாக டீனேஜ் பருவத்தை எட்டும் பிள்ளைகளுக்கு பேச வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கும். நண்பனை போல நடந்து கொண்டால் மட்டுமே நடப்பதை உண்மையாக கூறுவார்கள். அவர்களது நண்பர்கள் பள்ளியில் அன்றாடம் நடக்கும் விஷயங்கள் என்பது குறித்து அறிவது நல்லது.
இதனால் பிள்ளைகளை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். பிரச்சனை என்று வரும்போது தைரியமாக தயங்காமல் உங்களிடம் சொல்லவும் செய்வார்கள்.
சுதந்திரம் கொடுங்கள்
பிள்ளைகளுக்கு தனி சுதந்திரம் என்பது அவசியம். சில நேரங்களில் பிள்ளைகள் தனிமையில் ஏதேனும் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது ஏன் பேசாமல் இருக்கிறாய்? ஏன் சோகமாக இருக்கிறாய்? போன்ற கேள்விகளை கேட்க கூடாது. அவர்களுக்கு இது குறித்து பேச விருப்பம் இருக்காது. அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிக்க வேண்டும்.
இளம்பிள்ளைகள் அனைத்து விஷயங்களையும் உடனடியாக சொல்ல வேண்டும் என்று நினைக்காமல் அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அதே நேரம் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதும் நல்லது.
வாழ்க்கை பாடங்கள்
இன்றைய பிள்ளைகளுக்கு பெற்றோர் படும் பெரும்பாலான கஷ்டங்கள் தெரிவதில்லை. எல்லாமே எளிமையாக கிடைத்து விடுகிறது. வாழ்வில் நடந்த இக்கட்டான சூழ்நிலைகளையும் அதை எப்படி நீங்கள் கடந்து வந்தீர்கள் என்பதை குறித்து அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கும்போது மிக தெளிவாக வளர்வார்கள். இது ஒரு சூழ்நிலையை அவர்கள் கையாளுவதற்கு வழிவகுக்கும்.
pengal
சிவனுக்கு சொந்த ஊர் இங்குதான் இருக்கா…?
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.







