ஆரோக்கியம்
ஸ்க்ரப் டைபஸ்: உண்ணிக்காய்ச்சல் அறிகுறிகள் என்ன? எப்போது ஆபத்து?
- by geminimouli
- Sep 21, 2026
- 20 Mins
ஸ்க்ரப் டைபஸ்
அன்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்கு காய்ச்சலால உயிரிழக்கவில்லை. ‘அவர் ஸ்க்ரப் டைபஸ்’ என்னும் உண்ணிக்காய்ச்சலால் உயிரிழந்திருக்கிறார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மழைக்கால பருவத்தில் வரக்கூடிய காய்ச்சல், மலேரியா, டெங்கு, காலரா இடையே தற்போது உண்ணிக்காய்ச்சல் என்னும் பாதிப்பு குறித்தும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உண்ணிகாய்ச்சல் குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் விழிப்பு உணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அது பற்றி தெரிந்துகொள்வோம்.
உண்ணி காய்ச்சல்
உண்ணிக்காய்ச்சல் வருவதற்கு ‘ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்னும் பாக்டீர்யா தான் காரணம். புல் மற்றும் புதர்களில் வாழும் ஒட்டுண்ணி (சிகர்மைட் என்னும் பூச்சி) மூலம் இது பரவுகிறது. ஆள் உயரத்துக்கு வரும் புல், புதர்கள், வயல்வெளிகளில் வாழும் ஒரு வகை உண்ணி மற்றும் பூச்சி கடிப்பதன் மூலம் இது பரவுகிறது.
கிராமங்களிலும் காடுகளிலும் வயல்வெளிகளிலும் புழங்குபவர்களுக்கு வரக்கூடிய இந்த நோய் பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு போன்றவற்றால் அனைத்து இடங்களிலும் பரவலாக மாறிவருகிறது.
உண்ணிக்காய்ச்சல் அறிகுறிகள்
- பூச்சி கடித்த 6 முதல் 20 நாட்களில் அறிகுறிகள் தென்படும்
- காய்ச்சல் மற்றும் குளிர்நடுக்கம் நன்றாகவே இருப்பார்கள் திடீரென காய்ச்சல் தீவிரமாக இருக்கும்
- உடல் வலிகள்
- தசைவலி
- பூச்சி கடித்த இடத்தில் கருமையான, புண் (எஸ்கார்)
- குழப்பமான மனநிலை அல்லது கோமா வரையிலான மன மாற்றங்கள்
- வீங்கிய நிணநீர் கணுக்கள்
- சொறி
உண்ணிக்காய்ச்சல் சிகிச்சை
இதற்கு டாக்ஸிசைக்ளின் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால் முறையாக சிகிச்சை அளிகாவிட்டால் இது உறுப்பு சேதம் மற்றும் கடுமையான இரத்தப்போக்கு தீவிர நிலையில் உயிரிழப்பு வரை ஏற்படுத்தலாம்.
உண்ணிக்காய்ச்சல் தடுக்க முடியுமா?
உண்ணிக்காய்ச்சலைத் தடுக்க எந்தத் தடுப்பூசியும் இல்லை. பாதிக்கப்பட்ட பூச்சிகளுடனான தொடர்பை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய் தாக்கும் அபாயத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.
உண்ணிக்காய்ச்சல் பரிசோதனை
அறிகுறிகள் கண்டறிந்து அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகினால் ஸ்கர்ப் டைஃபஸ் அல்லது பிற நோய்களுக்கான இரத்தப் பரிசோதனை செய்ய மருத்துவர் அறிவுறுத்துவார். முடிவுகள் வருவதற்கு சில வாரங்கள் ஆகலாம் என்றாலும் அறிகுறிகள் கட்டுப்பட மருத்துவர் சிகிச்சை தொடங்குவார்.
உண்ணிக்காய்ச்சல் வராமல் தடுக்க
அறிகுறிகள் கண்ட உடன் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த காய்ச்சல் சீஸன் போல் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இருக்கும்.
வயல்வெளி, புதர்கள், புல்வெளிகளில் நடக்கும்போது கை மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் கனமான ஆடைகளை அணிய வேண்டும்.
டெங்கு போன்று திடீரென்று இந்த காய்ச்சல் வரும் நிலையில் அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது.
Author
pengal
Hot Categories
Recent News
Daily Newsletter
Get all the top stories from Blogs to keep track.







