
கர்ப்ப காலத்தில் மட்டும் அல்ல கர்ப்பத்துக்கு தயாராவதற்கு முன்பே வேண்டிய வைட்டமின்களில் முக்கியமானது தான் இந்த ஃபோலிக் ஆசிட்.ஃபோலிக் ஆசிட் என்பது வைட்டமின் – பி-யான ஃபோலேட்டின் ஒரு அங்கமாகும். கர்ப்பகாலத்தில் தினமும் வேண்டிய ஃபோலிக் ஆசிட் அளவு எவ்வளவு தெரிந்துகொள்வோம்.
ஃபோலிக் ஆசிட். இது நமது வாழ்க்கை முழுவதும் தேவை என்றாலும் ஆரம்பக்கால கர்ப்பக் காலம் மற்றும் கர்ப்பக் காலத்திற்கு முன்பும் மிகவும் தேவை . ஆரம்ப கால கருவளர்ச்சிக்கு இவை முக்கியமானது. ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணிகளுக்கு ஏன் அவசியம்.
நியூட்ரல் ட்யூப் என்றால் என்ன?
நியூட்ரல் ட்யூப் என்பது நமது முதல் மாத கர்ப்பக் காலத்தில் கருவின் இரண்டு பக்கம் அதாவது, முதுகு தண்டு சேர்ந்து ஸ்பைனல் கார்ட்-ஐ பாதுகாக்கும். இந்த நேரத்தில் வளரும் மூளை மற்றும் தண்டை நியூட்ரல் டியூப் என்பார்கள். இந்த டியூப் விந்தணு மற்றும் கருமுட்டை இணைந்த 28 நாட்களின் ஏற்படும். இவை ஆரோக்கியமாக வளர ஃபோலிக் ஆசிட் குறைபாடில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
ஃபோலிக் ஆசிட் குறைபாடுகள்
இந்த ட்யூப் சரியாக மூடவில்லை என்றால் Neutral tube defects (NDA) உண்டாகும். Anencephaly என்பது வளரும் கருவின் மூளை சரியாக வளராமல் இருப்பது. இந்தக் குறையுடன் பிறக்கும் குழந்தை பெரும்பாலும் இறந்து விடும். மேலும் 2015-இல் நடத்தப்பட்ட ஆய்வில் கர்ப்பக்காலத்தில் ஃபோலிக் ஆசிட் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதால் பிறக்கும் போது இதய பிரச்சனை சீரான அளவில் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இதய பிரச்னை என்பது பிறப்பதற்கு முன்னால் இதயம் அல்லது இரத்த நாளங்கள் சரியாக வளராமல் இருப்பதால் ஏற்படுகிறது என American Heart Associaiton கூறுகிறது.
கர்ப்பிணி தினமும் எவ்வளவு ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ள வேண்டும்?
கர்ப்பிணிகள் அனைவரும் ஒரு நாளுக்கு 600 மில்லி கிராம் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக் காலத்தில் எடுத்துக் கொள்ளும் prenatal vitamin-களில் இவை அதிகமாக இருக்கிறது. கர்ப்பமாக இருப்பது தெரிந்த பின் எடுத்துக் கொள்ளும் ஃபோலிக் ஆசிட் அளவு போதுமானதாக இருப்பதில்லை. விந்தணு மற்றும் கருமுட்டை சேர்வதை conception எனப்பதும். இவை ஏற்பட்ட 6 வாரம் வரை நிறைய பெண்களுக்கு தெரிவதில்லை. இந்த காலக் கட்டத்தில் தான் Neutral tube defects (NDA) ஏற்படும். இதை தடுப்பதற்கு கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் தினமும் 400 mcg ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ள வேண்டும்Cenre for Disease Contol and Prevention அறிவுறுத்துகிறது.
ஒருவேளை Neutral tube defects (NDA) உள்ள குழந்தையை பெற்ற பின் உங்களுக்கு அதிக அளவின் ஃபோலிக் அமிலம் தேவைப்படலாம். மறுமுறை கர்ப்பமாகும் பெண்களுக்கு இவை உதவும். அதற்கேற்றபடி உங்களது மருத்துவர் உங்களுக்கு அளவுகளை அறிவுறுத்துவார்கள்.
மேலும், உங்களுக்கு
சிறுநீரக பிரச்னை அல்லது டயாலிசிஸ், அரிவாள்செல் சோகை, கல்லீரல் பிரச்னை, அதிக அளவில் மதுபானம் எடுத்துக் கொண்டால்
எபிலிப்ஸி கை- கால் வலிப்பு, டைப்-2 சர்க்கரை நோய், சொரியாசிஸ், முடக்கு வாதம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பராக இருந்தால் அதிக அளவில் ஃபோலிக் ஆசிட் தேவைப்படலாம். இவர்கள் கருத்தரிப்புக்கு முன்பே குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசித்து ஃபோலிக் ஆசிட் உடன் மற்ற வைட்டமின்களையும் எடுத்துகொள்ள வேண்டும்.