ஆன்மிகம்மந்திரம்

துர்க்கை 108 போற்றி : துன்பம் போக்கி வெற்றிகளை குவிக்க வெள்ளி தோறும் சொல்லுங்க!

A beautiful idol of Maa Durga
A beautiful idol of Maa Durga
துர்க்கை அம்மனை வழிபட துர்க்கை அம்மன் 108 போற்றி முக்கியமானது.  கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் தீய சக்திகள் மடிந்து போக மகிஷாசுரமர்த்தினியாய் காத்தருள்பவள்.  தீராத நோய்கள், குறையாத கடன்கள், திருமணம் ஆகாத கன்னியர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நிம்மதி இல்லாத வாழ்க்கையை கொண்டிருக்கும் அனைவரது பிரச்சனைகளையும் நீக்கி வளமான வாழ்வும் குறையாத செல்வமும் குழந்தைப்பேறும் அளிப்பவள், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  ராகு காலத்தில்  துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி துர்க்கை அம்மன் 108 போற்றி படித்து வந்தால்  வாழ்வில் சகல வெற்றிகளும் கிடைக்கும்.

ஓம் துர்கையே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரர்க்கு எமனே போற்றி
ஓம் அன்பர்க்கெளியெவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அறக்காவலே போற்றி                                (10)

ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இறைவியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடிலாளே போற்றி
ஓம் உக்ரதேவதையே போற்றி
ஓம் உன்மத்தபான்ங்கியே போற்றி
ஓம் எண்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாக்குழவியே போற்றி                        (20)

ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் கவலையறச் செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுதாரியே போற்றி                              (30)

ஓம் கபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்கையே போற்றி
ஓம் கிருஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமாரியே போற்றி
ஓம் குருநகையளே போற்றி
ஓம் குங்குமப்பிரிமையே போற்றி
ஓம் குலக்காவலே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி         (40)

ஓம் சண்டிகேசுவரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தனபிரியையே போற்றி
ஓம் சர்வாலங்காரியே போற்றி
ஓம் சாமுண்டி்யே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல்கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி                        (50)

ஓம் சியாமளையே போற்றி
ஓம் சீதளையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றி
ஓம் ஜயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபாரியே போற்றி                                    (60)

ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம்  தீனர்க்காவலே போற்றி
ஓம் துட்டர்க்குத் தீயே
ஓம் துர்கனையழித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தர்குலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி                                      (70)

ஓம் நவகோணத்துறைபவளே போற்றி
ஓம் நிலவணியாளே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பயிரவியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் பிரம்மசாரிணியே போற்றி                        (80)

ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மலநாசினியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் மங்கலவடிவே போற்றி
ஓம் மகேசுவரியே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி                           (90)

ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலகத்தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதபுத்ரியே போற்றி
ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதையே போற்றி               (100)

ஓம் ரெளத்திரியே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வீர உருவமே போற்றி
ஓம் விஷ்ணுதுர்கையே போற்றி
ஓம் வையகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி                   (108)

 

Photo by Sonika Agarwal on Unsplash

 

 

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...