
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். ஆனால் எண்ணங்களை எப்படி ஒழுங்குப்படுத்துவது? மனித மனம் எப்போதும் அலை பாய்ந்துக் கொண்டே இருக்கும். அலைபாயும் மனங்களைக் கட்டுப்படுத்தி நல்ல எண்ணங்களை விதைக்கவும் மந்திரங்கள் உதவுகிறது.
கடவுளிடம் நாம் உறையாடவும் மந்திரங்கள் உதவும் என்றும் சொல்லலாம். 31 முறைகளில் நாம் தியானத்தை கடைப்பிடிக்கலாம். அதில் ஒரு வகை மந்திரம் கூறுவது.
ஒருவர் எப்போதும் ஏதாவதொரு மந்திரங்களைக் கூறிக் கொண்டே இருந்தால் அவரது எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் விதைத்து, மனதைரியம் பெற்று தெளிவுடன் இருப்பார்கள். பொதுவான மந்திரங்கள் மட்டுமல்லாமல் நமக்கு இருக்கும் குறைகளுக்கும் மந்திரங்கள் உண்டு.
1. கல்வி, அறிவு வளர்ச்சி பெறுவதற்கு:
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் க்ம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா
2. கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெறுவதற்கு:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:
3. லட்சுமி கடாட்சம் கிடைக்க:
ஓம் ச்ரீம் ச்ரியை நம:
குறிப்பாக காலை மாலை வேளையில் குளித்து சுத்தமாக விளக்கேற்றி 108 முறை கூறுங்கள். இரு வேளையும் இயலாதவர்கள் ஒருவேளை மட்டுமாவது கூறுங்கள். மேலும், இந்த மந்திரங்களை கிடைக்கும் நேரத்தில் கூறுவது நல்லது.
