ஆன்மிகம்

ஷீரடி சாய்பாபா 108 போற்றி !

பாபா 108 போற்றி

பாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம் சர்வ வல்லமை படைத்தது. பாபா என்றதுமே மனத்தில் ஓர் நிம்மதி வந்துவிடுகிறது. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் எத்தனை துன்பங்கள் சூழ்ந்தாலும் பாபாவை சரணடைந்த பிறகு எதையும் யோசிக்க வேண்டியதில்லை. பக்தர்களை பாபா அப்படி விட்டதும் இல்லை. வேண்டியதை வேண்டாமலே கொடுப்பவன் பாபா என்பதை பாபாவின் பக்தனால் மட்டுமே உணரமுடியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவை நினைத்து இந்த 108 நாமாவளியை சொல்லுங்கள். பாபாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஓம் சாயிநாதனே போற்றி
ஓம் சீரடி உறைந்தவனே போற்றி
ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
ஓம் அன்பு வடிவானவனே போற்றி
ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி
ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உவகை தருபவனே போற்றி
ஓம் உளமதை அறிபவனே போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
ஓம் விட்டலின் வடிவே போற்றி
ஓம் சுவாமியே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் பாபா போற்றி
ஓம் பாதமலரோன் போற்றி
ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
ஓம் ராமானந்த சீடனே போற்றி
ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் விற்பபன்னனே போற்றி
ஓம் பொற்பாதனே போற்றி
ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் மங்கள ரூபனே போற்றி
ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி
ஓம் நீதியை புகட்டினன் போற்றி
ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
ஓம் நிறை குணத்தோனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் மறை அறிந்தவனே போற்றி
ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
ஓம் மாதவத்தோனே போற்றி
ஓம் அபயக் கரத்தோனே போற்றி
ஓம் அமரர்க்கோனே போற்றி
ஓம் அகம் உறைபவனே போற்றி
ஓம் அசகாய சூரனே போற்றி
ஓம் அசுர நாசகனே போற்றி
ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
ஓம் அணுவணுவானவனே போற்றி
ஓம் அமுத விழியோனே போற்றி
ஓம் அரங்க நாயகனே போற்றி
ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
ஓம் அருவமானவனே போற்றி
ஓம் ஆதாரமானவனே போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் கிரியா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் இமையவனே போற்றி
ஓம் இங்கித குணத்தினனே போற்றி
ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
ஓம் இருள் நீக்குவோனே போற்றி
ஓம் ஈகை கொண்டவனே போற்றி
ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உமாமகேசுவரனே போற்றி
ஓம் உயிராய் நிற்பவனே போற்றி
ஓம் உவகை அளிப்பவனே போற்றி
ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
ஓம் ஐயம் களைபவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஓங்கார ரூபனே போற்றி
ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
ஓம் ஓளடதமானவனே போற்றி
ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி
ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
ஓம் சூதறுப்பவனே போற்றி
ஓம் சூனியம் களைபவனே போற்றி
ஓம் செம்மலரடியோனே போற்றி
ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் பண்பின் வடிவானவனே போற்றி
ஓம் பலம் அருள்வோனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி
ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
ஓம் அன்னை வடிவினனே போற்றி
ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
ஓம் மகாயோகியே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி

What's your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...