
தோஷம் என்பது நமது வாழ்வில் நாம் செய்த குற்றங்களை குறிக்கும். பிரதோஷம் என்றால் செய்த குற்றங்களை தொலைத்து குற்றமற்ற வாழ்வை வாழ்வதற்கு செய்யும் வழிபாட்டைக் குறிக்கும். சிவபெருமானுக்கு உரிய விரத தினங்களில் ஒன்று பிரதோஷம். அதிலும், சனிக்கிழமைகளில் வரும் சனி மஹாபிரதோஷம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.
பிரதோஷம் என்றால் என்ன?
இரவும் பகலும் சந்திக்கும் நேரத்தில் சூரியனுக்கு மனைவியாக பிரதியுஷா இருப்பார். இதை பிரத்யுஷத் காலம் என்பார்கள் இது நாளடைவில் பிரோதஷம் என்றானது.
சனி மஹாபிரதோஷத்தின் மகிமை:
ஐந்து வருட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று முழு உபவாசம் இருந்து சிவபெருமானை சிந்தையில் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட வழிப்பாட்டிற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பஞ்சமா பாதம் செய்தவர்களுக்கு விமோசனம் பெற இந்த விரதம் கைக்கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை:
வளர்பிறை தேய்பிறை பட்சங்களில் வரும் திரியோதசி திதியே பிரதோஷமாக கருதப்படுகிறது. இந்நாளில் காலையில் நீராடி சிவாலயம் சென்று வழிப்பட வேண்டும். முடிந்தவரை முழு உபவாசம் இருப்பது நல்லது.
கோவிலில் அபிஷேகம் முடிந்த பின் விரதத்தை நல்லபடியாக நிறைவேற்றியதற்கு குலதெய்வம் மற்றும் சிவபெருமானுக்கு நன்று கூறி எளிய உணவினை எடுத்துக் கொள்ளுங்கள். கருணை வடிவே உருவான சிவபெருமானை மனமுருகி வேண்டுவோருக்கு நினைத்தவை எல்லாம் நடக்கும்.
கூற வேண்டிய மந்திரங்கள்:
1. பஞ்சாட்சரம்:
ஓம் சிவாயநம:
2. ருத்ர காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர பிரச்சோதயாத்
3. மஹா மிருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வருகமிவ பந்தனன்
மிருத்யோர் மூக்ஷியமாம்ரிதாத்.
