
திருமலை நாயகனை தூக்கத்திலிருந்து அழகாய் பாராட்டி சீராட்டி அதிகாலை துயிலெழுப்ப பாடப்படும் கெளசல்யா.. சுப்ரஜா என்னும் சுப்ரபாதம் திருமலையானுக்கு மட்டும் அல்ல. அதை கேட்கும் பக்தர்களுக்கும் ஆன்மிக தாலாட்டுதான். திருமலை முழுக்க ஒலிக்கும் இந்த நாதத்தை பக்தர்கள் எங்கிருந்து கேட்டாலும் ஏழுமலையானை தரிசித்த பேறு கிட்டிவிடும்.
உலகம் முழுக்க இருக்கும் திருமலை பக்தர்கள் காலை எழுந்ததும் முதலில் சுப்ரபாதம் கேட்பதையே வழக்கமாகி கொண்டிருக்கிறார்கள். மனம் முழுக்க திருமலை நாயகனை நினைத்து வேங்கடவனை அடைந்தும் விடுகிறார்கள். அப்படியென்ன அவ்வளவு சிறப்பு இந்த சுப்ரபாதத்துக்கு தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பிரம்மரிஷி என்றழைக்கப்படும் விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட ரிக் வேதத்தையும் எழுதியவர் ஆவார். இறைவனே கதி என்று நினைத்து எப்போதும் கடுமையான தவங்களையும் யாகங்களையும் செய்துவந்தார். தவயோகியான இவர் செய்யும் யாகங்களுக்கு இறைவன் அருள் உண்டு. ஆனால் எங்கே இவர்கள் பலமிக்கவர்களாகிவிடுவார்களோ என்று இவர் இறைவனை நினைத்து யாகம் செய்யும் போது அரக்கர்கள் வேள்வியை செய்யவிடாமல் இடையூறு செய்து வந்தார்களாம்.
தொடர்ந்து யாகங்களில் இடையூறு உண்டாகவே விஸ்வாமித்திரர் மனம் கலங்கி அயோத்தியை ஆண்ட தசரதனை சரணடைந்தார். அப்போது ஸ்ரீ மந் நாராயணனின் அவதாரமான இராமனும், இலட்சுமணனும் வந்தார்கள். அவர்களை துணைக்கு அனுப்பினார் தசரத மன்னன்.
அவர்கள் விஸ்வாமித்திரருடன் நீண்ட தூரம் கடு மேடுகளை கடந்து நடந்து வந்தார்கள். இறைவனானாலும் மானிட அவதாரமாயிறே. அதனால் களைப்பில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று கங்கைக்கரையில் ஓய்வெடுக்க நினைத்து அங்கேயே தங்கினார்கள். களைப்பில் உறங்கிவிட்டார்கள்.
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 4. 30 மணிக்கே விஸ்வாமித்திரர் உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். ஆனால் இராமனும் இலட்சுமணனுடன் நன்றாக உறங்கி கொண்டிருந்தார். எப்படி இவர்களை எழுப்புவது என்று நினைத்தப்படி விஸ்வாமித்திரர் கங்கைக்கரையில் நீராடி முடித்து வந்தார்.
அப்போதும் இருவரும் எழுந்திருக்கவில்லை. இராமன் எந்திரிக்காமல் தூங்கி கொண்டே இருக்கஅவர்களை இதமான முறையில் எழுப்ப கெளசல்யா சுப்ரஜா என்னும் பாடலை பாடினாராம்.
தெய்வக்குழந்தைகளை எழுப்பும் பாக்கியம் ஒருநாள் மட்டுமே தமக்கு கிடைத்திருப்பதை எண்ணி ஆனந்தம் கொண்படி இந்த பாடலை பாடினார். அதே நேரம் இவர்களை தினமும் எழுப்பகூடிய கெளசல்யா பெற்ற பேறை நினைத்து தான் கெளசல்யா சுப்ரஜா என்னும் சுப்ரபாதத்தை பாடி எழுப்ப தொடங்கினார்.
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!
கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!
இந்த சுப்ரபாதம் தான் உலகமெங்கும் உள்ள திருமலை நாயகனின் பக்தர்களின் வீட்டிலும் , வேங்கடமலை ஏழுமலையான் அமர்ந்துள்ள திருப்பதியிலும் ஸ்ரீமந் நாராயணனின் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் எம்.எஸ். சுப்புலட்சுமி குரலில் ஒலிக்கிறது.
இனி உங்கள் இல்லங்களிலும் அதிகாலை சுப்ரபாதம் ஒலிக்கட்டும். ஏழுமலையான் ஏழுமலைகளை கடந்து உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியாய் வாசம் செய்வார்.

[…] சேஷசயனா போற்றி 30. ஓம் நாராயணா போற்றி https://pengal.in/story-behind-the-song-suprabhatham/ 31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி 32. ஓம் […]
…