
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி 01-01-2024 திங்கள்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, மனதுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பகைவர்கள் விலகியே நிற்பர். ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப வருமானம் மிதமாக இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். உடல் சோர்வு, அசதி நீங்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் நினைத்ததை வெற்றிகரமாக செய்ய முடியும். பெற்றோர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, வருங்காலத்தை குறித்த யோசனை இருக்கும். மனசஞ்சலம் நீங்கும். சொத்து விவகாரத்தில் வில்லங்கம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் செலவுகளை குறையாகவும். நண்பர்கள் எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பர். வாகன மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். உடல் நலம் பலம் பெரும். தள்ளிப்போன வாய்ப்புகள் மீண்டும் கைக்கு வரும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். புது வீடு, மனை வாங்குவது குறித்த யோசனை வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, சுற்றியுள்ளவர்கள் ஆதரவால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். புது தொழில், யோகம் அமையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன மகிழ்ச்சி கூடும் நாள். கணவன் மனைவி உறவில் குதூகலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பொருள் வரவு இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல சம்பவங்கள் நடக்கும். மற்றவர்கள் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். தொழில், வியாபார தொடர்பான பயணங்கள் இருக்கும்.
Image credits: Freepik