
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 19ம் தேதி 04-01-2024 வியாழக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பழைய வண்டி வாகனங்கள் சிலவு வைக்கும். எடுத்த காரியங்கள் முடிப்பதில் சிரமம் இருக்கும். வேண்டிய பொருட்களை வாங்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் ஔிவு மறைவு வேண்டாம் குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசவும். வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஏற்றம் இருக்கும்.வியாரங்கள் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, சகோதரர்களிடம் இணக்கமாக இருக்கவும் குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். கோப தாபங்களை கொஞ்சம் குறைத்துக்கொள்ளவும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, மனதில் ஒருவித பயம் தோன்றும் தூர பயணங்களைத் தவிர்க்கவும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். செலவுகளை குறைக்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலைகள் மாறும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மன சஞ்சலம் காணப்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகும். ஆடம்பர சிலவுகளை குறைக்கவும் மனம் தெளிவு பெரும். நம்பியவருக்கு நல்லுதவி செய்ய முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிக்கம்
விருச்சிக ராசி நண்பர்களே, யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள் குடும்ப நலனில் கவனம் தேவை. எதிரிகள் விலகி நிற்பர். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே,அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்காதீர்கள் குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். கடினமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சுபகாரியங்கள் தவிற்க்கவும் உற்றார், உறவினர்களிடம் சுமுக உறவு ஏற்படும். நேர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, விரைய சிலவுகள் உண்டாகும் சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் புது முயற்ச்சிகள் தவிற்க்கவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
Image credits: Freepik