
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் மாசி 21ம் தேதி 04-03-2024 திங்கட்க்கிழமை.
மேஷம்.
மேஷ ராசி நண்பர்களே, மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.இன்று மாலை 6 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பம் கலகலப்பாக இருக்கும். உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். பிடிவாத குணத்தை தளர்த்திக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.இன்று மாலை ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் அடுத்த இரு தினங்களுக்கு கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும்.பிடிவாத குணத்தை தவிற்க்கவும்.பொது விஷயங்களில் தலையிடுவது தவிர்த்தல் நல்லது. உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் புது அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, புது உற்சாகம் பிறக்கும் சோம்பல் மறையும் காரிய தடைகள் அகலும். குடும்ப பெருமையை உயர்த்த முடியும். மனதில் நினைத்த காரியம் விரைவில் முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.புது நபர்களின் சந்திப்பு நிகழும் . வீட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். குடும்ப நபர்களால் மனக் கலக்கங்கள் வந்து போகும். சுப விரையங்கள் உண்டாகும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சூடு பிடிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும்.குடும்பத்துக்காக தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரங்கள் மந்த நிலை காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப கௌரவம் உயரும். கடந்த கால சிந்தனைகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப நபர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போவது நல்லது. நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருங்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். காரிய தடைகள் விலகும்.பிரபலங்களின் தொடர்பு ஆதாயம் தரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். கவன குறைபாடு காணப்படும் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
Image credits: Freepik