இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரர்களுக்கு தியானம் மன நிம்மதியை தரும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 20ம் தேதி 05-01-2024 வெள்ளிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நினைத்த காரியம் கைகூடும்.உங்கள் அறிவு திறன் மேம்படும். தியானம் மனநிம்மதியை தரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். பிடித்தமான பொருட்களை வாங்க முடியும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். பிரியமானவர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே,பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் ஸ்வாரஸ்யம் அதிகமாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் தவிற்பது நலம். நண்பர்கள் உதவி கேட்டு வருவர். மன தைரியம் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். பெண்கள் வழியில் சில சிக்கல்கள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பொருளாதார நிலை உயரும்.கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் ஒற்றுமை நிலவும். யாரிடமும் வம்பு, வழக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பூசல்கள் மறையும். புதிய பாதையில் பயணிக்க முடியும். நினைத்த காரியம் நிறைவேறும். வேண்டியவர்கள் நேசம் கரம் நீட்டுவர். உத்யோகத்தில் ஈகோ பிரச்சனைகளை தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சில புதுமைகள் நடக்கும். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பகளே, குடும்பத்துடன் இன்றைய நாளை செலவழிக்க வேண்டிவரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உறவினர்களால் சில தொந்தரவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் இருப்பதால் காரிய தடைகள் உருவாகும் கவனம்.
Image credits: Freepik






