
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் பெற்றோர்களிடம் கனிவாக நடந்துக் கொள்ளவும்.
சோபகிருது வருடம் தைமாதம் 23ம் தேதி 06-02-2024 செவ்வாய்க்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கனிவான பேச்சால் நினைத்த காரியம் சாதிப்பீர்கள் வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். சேமிப்பு கணிசமாக உயரும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாரத்தில் மந்தநிலை நீடிக்கும்.
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இன்றி சீராக இருக்கும். உடல் நலம் பலம் பெரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சூட்சுமங்கள் தெரிய வரும் தொழில் எதிரிகள் விலகுவார்கள்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, அந்நிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைதுணை வழியில் ஆதாயம் உண்டு.புதிய வாகன யோகம் உண்டு அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் வருமானம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பகளே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உறவினர்கள் வழிகளில் தேவையற்ற சிரமங்கள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவிகள் கிடைக்கும்.பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். குடும்ப உறவுகளுக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து உறவு பலப்படும்.உடல் நலனில் கவனம் தேவை எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, உறவினர்கள் இல்லம் நாடி வருவர்.நற் செய்தி ஒன்று கிடைக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை செய்ய முடியும். பிரியமானவர்களால் சில தொந்தரவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப சுமை கூடும். பண விரையங்கள் உண்டாகும்.விரும்பிய பொருட்களை வாங்க முடியும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, நினைத்த காரியம் நிறைவேறும். பராமரிப்புகள் செலவுகள் கூடும். பெற்றோர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப உறவுகள் நல்லவிதமாக இருக்கும்.சகோதர வழியில் நன்மைகள் உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும்.கணவன் மனைவிக்குள் விவாதங்கள் தவிற்க்கவும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.கடன் சுமைகள் குறையும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் வருங்கால திட்டங்கள் நடைபெறும்.புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பெற்றோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
Image credits: Freepik