
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரர்கள் இன்று எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற வேண்டும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 21ம் தேதி 06-01-2024 சனிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பண வரவில் தாமதம் இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கடின உழைப்பு இருக்கும். உங்கள் காரியங்களை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவை. நட்பால் நன்மை வந்து சேரும். சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் குடும்ப பெரியவர்களின் வார்த்தைகளை மதிப்பது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, ஞாபக மறதி காணப்டும் .எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து அகற்றவும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி
கன்னி ராசி நணாபர்களே, அவசர முடிவுகள் தவிருங்கள் எதிலும் புத்திக் கூர்மையுடன் செயல்படுவது நல்லது. விட்டுச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் நீயா நானா போட்டி உருவாகும் உறவினர்கள் வழியில் அலைச்சல் இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தினர் மனமுவந்து பாராட்டுவார்கள் . கோபம் அதிகமாக காணப்டும் வாக்கு வன்மை கூடும். அடுதாதவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள் அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் தாமதமாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரக்கள் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளூவீர்கள்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, பேச்சில் நிதானத்தை பின்பற்றுவது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும் .உறவினர் வகையில் அதிக செலவு வரலாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நேயர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் தேவை.
Image credits: Freepik