
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் மாசி மாதம் 24 ம் தேதி 07-03-2024 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே,முன் கோபத்தை தவிற்க்கவும். முக்கிய காரியங்களில் காலதாமதம் ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப ஆதரவு பெருகும். கணவன் மனைவி உறவு பலப்படும்.உணர்ச்சி வசப்பட்டு யாரிடத்திலும் பேச வேண்டாம். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறை சொல்வது தவிர்க்கவும். விஐபிகளின் அறிமுகம் உற்சாகம் தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பாரம் அதிகரிக்க தொடங்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். திருமண பேச்சு வார்த்தை தொடங்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்ல அனுசரணை கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். நல்ல செய்தி ஒன்று காதில் விழும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் விரைவில் முடியும். நண்பர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, முக்கிய பணிகளில் ஒன்று முடிவடையும். பொருளாதார பிரச்சனைகள் வரும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.
Image credits: Freepik