
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் தை மாதம் 25ம் தேதி 08-02-2024 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிரியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு தாமதமாகும். ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு பெரியளவில் நன்மைகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. யாரையும் தூக்கி எரிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.மதியம் வரை ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பெற்றோர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள்.புதிய நபர்களிடம் கவனமாக பழகுங்கள்.வீடு மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாரபாரம் மிதமாக இருக்கும். மதியத்துக்கு மேல் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
கடகம்
கடக ராசி நண்ர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணவன் மனைவிக்குள் வாக்கவாதங்கள் வேண்டாம்.சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். ஆடம்பர சிலவுகள் குறைக்கவும்.தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும்.
அடுத்தவர்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவும்.தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. மனதில் இருந்து வந்த பாரம் குறையும். கணவன் மனைவி உறவு பலப்படும் உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் லாபகரமாக அமையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். மன வலிமை கூடும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். புதுபுது பிரச்சனைகள் எந்த ரூபத்திலும் வரலாம் கவனம்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, சொந்த, பந்தங்கள் ஆதரவாக இருப்பர். மனசங்கடங்கள் குறையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வாகன யோகம் உண்டு புது நட்பால் ஆதாயம் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.புது தொழில் யோகம் அமையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, இழுபறியில் இருந்த காரியங்கள் விரைவில் முடிவடையும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். தேக நலனில் கவனம் தேவை. உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டிவரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.வாக்கு சாதுரியம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. முன் கோபத்தை தவிற்க்கவும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரம் செழிப்படையும்.
Image credits: Freepik