
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 23ம் தேதி 08-01-2024 திங்கட்க்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை கவனமாக கையாளவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பங்கள் ஏற்படுத்தும் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும்.
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,மனம் அமைதி பெறும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் குடும்பத்தில் சகஜநிலை திரும்பும். எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் தேவையற்ற புகைச்சல் உண்டாகும்.குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும். தவிர்க்க முடியாத செலவுகள் மன அமைதியைக் கெடுக்கும். ஆடம்பர சிலவுகள் குறைப்பது நல்லது.
புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,குடும்பத்தில் பகை மறைந்து இணக்கம் ஏற்படும். முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரிடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். நெருக்கமானவர்கள் உதவிக் கேட்டு வருவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனம் குழப்பமாக காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்ய முடியும். பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.பழைய நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள்.
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, கோபம் அதிகமாக காணப்படும்.பிறரை விமர்சிப்பதால் சிக்கல்கள் வரும். சவால்களை சந்திக்க வேண்டிவரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். தனவரவு இருக்கும். திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைக்க முடியும். உத்யோகத்தில் கவனம் தேவை.
அலைச்சல் அதிகமாக காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். நிதி நிலைமை சீரடையும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
Image credits: Freepik