
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் வேண்டியவர்களை பகைத்து கொள்ள வேண்டாம்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 24ம் தேதி 09-01-2024 செவ்வாய்க்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, உறவினர்கள் மூலமாக நற்செய்தி கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தால் வெற்றிகளை குவிக்க முடியும். தூர பிரயாணங்கள் தள்ளி போகும். பெண்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.ராசிக்குள் சந்திஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்லும். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். தேக ஆரோக்கியம் பலம் பெறும். புத்தி கூர்மையால் காரிய சித்தி உண்டாகும்.உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.வியாபாரங்கள் சிறப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தள்ளிப்போன காரியங்கள் விரைவில் முடியும். கோப தாபங்களை குறைப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும் தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் இருக்கும். வேண்டியவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்தில் செய்யப்படும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நீண்ட நாள் பிரச்சினை முடிவிற்கு வரும். பொதுவாழ்வில் புகழ் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பணிசுமை கூடும். தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும் புதிய முதலீடுகள் தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் தவிற்பது நலம்.ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கலை தீர்க்க வழி கிடைக்கும். நிலுவையில் இந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள் கணவன் மனைவி உறவு பலப்படும்.மனதில் இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற முடியும். மற்றவர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்தாபங்கள் மறையும்.விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொதுக் ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டு .பிரிந்த நட்பு ஒன்று கூடும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
Image credits: Freepik