
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி ராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்?
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25ம் தேதி 11-12-2023 திங்கட்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கு இதமான செய்தி வரும். உறவினர்களுடன் சண்டை போய் சமரசம் ஏற்படும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமும் கவனமும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப தேவை அறிந்து செயல்படவும். சில மருத்துவ செலவுகள் வரும். மறைமுக எதிரிகள் இருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எடுத்த காரியத்தை முடிப்பதில் சிரமம் இருக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். கடினமான காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். யாருக்கும் உத்திரவாதம் தர வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, புதிய விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி மறதி தொல்லை வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சுறுசுறுப்படையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். முக்கிய நபர்களை சந்திக்க நேரிடும். தன வரவுக்கு வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். எதை செய்வது, எதை விடுவது என்ற குழப்பம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பிறர் தவறுக்கு நீங்க பழி ஏற்றிருந்த நிலை மாறும். வேற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, துணிச்சல், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.