
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களது பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 26ம் தேதி 11-01-2024 வியாழக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,அலைச்சல் அதிகமாகும். குடும்பத்தினருடன் சின்ன மனவருத்தம் வரும்.கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் உண்டாகும். கடன் பிரச்சினை குறையும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, நீண்ட நாள் கனவு நினைவாகும். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். புது நபர்களிடம் கவனமாக பழகவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பல வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டிவரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.கோபங்களை யாரிடமும் காட்டாதீர்கள். ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் பிள்ளைகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் தனவரவு இருக்கும். எதிரிகளின் தொல்லை காணாமல் போகும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகம் தொழில் சிறக்கும், அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிறரை விமர்சிப்பதால் தேவையற்ற சிக்கல் வரும்.சகோதரர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
துலாம்.
துலாம் ராசி நண்பர்களே,மனதில் புது உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன ஸ்தாபங்கள் அகலும்.சொந்த பந்தங்கள் இல்லம் நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
விருச்சிகம்.
விருச்சிக ராசி நண்பர்களே,புதிய செய்தி ஒன்று கிடைக்கும் மனக்கவலைகள் அகலும். சவால்கள், விவாதங்களில் ஜெயிக்க முடியும். ஞாபகமறதி தொல்லை இருக்கும். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும்.. புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காண்ப்படும்.
அவசர முடிவுகள் தவிற்ப்பது நலம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.கடன்கள் சிறுக சிறுக அடைபடும். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே,புது உத்வேகம் பிறக்கும் எதிரிகள் விலகுவார்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.அலைச்சல் அதிகமாக காணப்படும்.
புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,முன் கோபங்களால் பிரச்சனைகள் உருவாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. யாரையும் விமர்சிக்க வேண்டாம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
Image Credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0