
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 26ம் தேதி
12-12-2023 செவ்வாய்க்கிழமை
இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக் கூடிய ராசிக்காரர்கள் யார்?
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, மனதில் நினைத்தது நடக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தொழில், வியபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.ராசிக்குள் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப நெருக்கடியை சமாளிக்க முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
மாலை சந்திராஷ்டமம் தொடங்குகிறது .
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, புது திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடகம்
கடக ராசி நண்பர்களே, ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு மனநிறைவை தரும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். பெரியோர்கள் தகுந்த ஆலோசனை வழங்குவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். வரவை விட செலவுகள் ஒரு படி அதிகம் இருக்கும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, நல்லவர்கள் அறிமுகத்தால் நன்மை உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு வருவர். மனதிற்கு பிடித்ததை மட்டும் செய்யவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். புது தொழில் யோகம் அமையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
மீனம்
மீன ராசி நண்பர்களே, எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.