
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிப்பது நல்லது.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 27ம் தேதி 12-01-2024 வெள்ளிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் காணப்படும். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அடுத்தவர்களை குறைக்கூறுவதை நிறுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனதுக்கு இனிய செய்தி ஒன்று கிடைக்கும் பொது வாழ்வில் புகழ் வந்து சேரும். உறவினர்கள் உதவிக் கரம் நீட்டுவர். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். தெய்வ வழிபாடு மூலம் மனக்குறைகள் தீரும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் மேலோங்கம். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சவாலான காரியங்களையும் சாதரணமாக செய்ய முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,எதிர் பார்த்த பணம் கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் தவிற்ப்பது நலம். குடும்பத்தில் ஏற்றமான பலன் உண்டு. கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, தொழில் போட்டிகள் குறையும்.எதிர்த்து நின்று போராடும் தைரியம் இருக்கும், பொருளாதார வளம் மேம்படும். சிறப்பான செயல்களால் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி பொங்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். உறவினர்களிடம் சிறிய மனஸ்தாபம் ஏற்படலாம். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாரபாரங்கள் லாபத்தை தரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, மனதில் எப்போதும் இல்லாத சந்தோஷம் ஏற்படும். தொல்லை தந்தவர்கள் விலகி நிற்பர். வீண் விவாதங்கள் வந்து போகும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மகரம்
மகர ராசி நண்பபர்களே பிடித்தமான விஷயங்களை செய்ய முடியும். பண பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காண்படும்.புதிய முயற்ச்சிகள் தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் உயரும். திட்டமிட்ட காரியத்தில் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிககுள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். உள்ளமும் மனமும் மகிழ்ச்சி காணும். அன்றாட தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உடலும் புத்துணர்வுடன் செயல்படும். நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0