ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan -13 பிப்ரவரி 2024

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் போட்டிகள் குறையும். 

சோபகிருது வருடம் மாசிமாதம் 1ம் தேதி  13-02-2024  செவ்வாய்க்கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். அனாவசிய செலவுகளை குறைக்க பார்க்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். பண தேவைகள் அதிகரிக்கும். கடனகள் சிறுக சிறுக அடைபடும்.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தாருடன் நல்லுறவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும்.பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் சில மனவருத்தம் வரும்.அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். பண வரவில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக அமையும்.மாலை  6 வரை வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தோன்றுவதை தைரியமாக செயல்படுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.உறவினர்களிடம் கவனமாக பழகவும். பயணங்கள் சாதமாக அமையும். காரியம் அனுகூலம் உண்டாகும்.அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். பழைய சிக்கல் ஒன்று பேச்சு வார்த்தை மூலமாக இன்று தீரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சாதூர்யமாக பேசி காரியம் சாதிக்க முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.வருங்கால சேமிப்புகளுக்கான முயற்சிகள் தொடங்குவீர்கள்.வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும்.வெளியூர் பயணங்களால்  மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். யாரையும் திருப்திப்படுத்த நினைக்காதீர்கள்.மன பாரம் கூடும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் போட்டிகள் இருக்கும்.

மீனம்

மீன ராசி நண்ர்களே,மனதில் ஒருவித பயம் தோன்றும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். சொந்த தொழில், விருத்தி பெரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.

Image credits: Freepik

 

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...