
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
குடும்பத்தில் வீண் குழப்பங்களை சந்திக்க கூடிய ராசி எது?
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 28ம் தேதி
13-01-2024 சனிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பண வரவு இருக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து தர இயலும். எதிரிகளின் பலம் வெகுவாக குறையும். புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனதிற்கினிய செய்தி கிடைக்கும். பிரியமானவர்களுக்காக நிறைய விட்டுக்கொடுக்க வேண்டிவரும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். கடன் நெருக்கடி குறையும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,கோபம் அதிகமாக காணப்படும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். கணவன் மனைக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதரணமாக செய்ய முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, விட்டு கொடுத்து போவதில் நன்மைகள் காணலாம் .வசீகர பேச்சில் மற்றவர்களை எளிதில் கவர முடியும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் மூன்றாம் நபர்களால் சண்டைகள் உருவாகும்.புதிய திட்டங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனை ஓரளவு சீராகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பெற்றோரின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உடல் நலம் சீர் பெரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும். அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் ஆதாயம் காணலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பல நாள் கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். நண்பர்கள் உதவி புரிவார்கள் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். மனதில் தோன்றும் யோசனைகள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.எதிர்பாராத செலவுகள் வரும்.கையிருப்பு கரையும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பகளே, குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த பணம் வசூல் ஆகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
image credit – Freepik