
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று வீண் விவாதங்கள் தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 28ம் தேதி 14-12-2023 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கடுமையான வேலையால் மனச்சோர்வு ஏற்படும். பண பிரச்சனையால் மன சங்கடம் வரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, நல்ல காரியங்களை தாமதிக்காமல் செய்யவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். பெற்றோர்கள் ஆதரித்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, கௌரவும் உயரும். கடன் தொந்தரவு இருக்கும். புதுத் தொழில் யோகம் அமையும்.பழைய கடனாக கொடுத்த தொகை கிடைக்கும் .
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். எதிர்பார்த்த நல்ல செய்தி விரைவில் வரும். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.நண்பர்களுடன் கவனமாக இருக்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.சுப விரைய செலவுகள் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப நபர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.நண்பர்களின் உதவி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே, உணவு உட்கொள்வதிற்கு நேரம் ஒதுக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, தெய்வீக சிந்தனைகள் அதிகமாகும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் தவிற்பது நல்லது.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப வாழ்க்கை சீரான முறையில் இருக்கும். கடின முயற்சிகள் கூட சாதாரண முடிவுகளை தரலாம். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.உறவினர்கள் மூலமாக நற் செய்தி ஒன்று கிடைக்கும் .
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.