
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்!
சோபகிருது வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி
14-02-2024 புதன்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும் மன நிம்மதிக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பெற்றோர்களிடம் அன்பும் பாசமும் அதிகமாகும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரிய வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை உண்டாகும். சாதுரியமான செயலால் எதிலும் ஜெயிக்க முடியும்.புதிய வாகன யோகம் உண்டு புது வீடு மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.ராசிக்குள் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மனஅழுத்தம் சீராகும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும்.உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும் தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது சிறப்பு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய காரியங்கள் நடைபெறும். பழைய வீட்டை சீரமைக்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.ஆடம்பர சிலவுகள் குறைக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும்.சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து வந்த விரோதம் மறையும்.நட்பு மலரும் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நண்பர்களுடன் சின்ன விரிசல்கள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல புதுமைகளை நிகழ்த்த முடியும். உறவு முறைக்குள் இருந்து வந்த பகைகள் மறையும் நல்லுறவு ஏற்படும்.பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
Images credit – Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0