
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 29ம் தேதி 15-12-2023 வெள்ளிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிற்ப்பது நல்லது.குடும்ப நபர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பயணங்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் தெளிவும், உற்சாகமும் பிறக்கும். நண்பர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். சவாலான காரியங்களையும் எளிதாக சமாளிக்க முடியும். சொத்து விவகாரத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, தேக நலனில் அக்கறைகொள்வது அவசியம். பிராத்தனைகள் நிறைவேறும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூட இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப செலவுகளை குறைக்க திட்டமிடவும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனக்குழப்பம் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். குடியிருக்கும் வீட்டை பராமரிக்க வேண்டிவரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.மாலை 04:39 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பொருளாதார நிலை உயரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.மாலை 04:39 மணிக்கு மேல் ராசிக்குள் சந்திரன் பிரவேசிக்கிறார் இதனால் அடுத்த இரண்டு தினங்கள் மனக்குழப்பம் காணப்படும் .
கும்பம்
கும்ப ராசி நண்பகளே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். மனபயத்தை நீக்கவும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.