
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று முன் கோபத்தால் பாதிப்புகள் வர அதிக வாய்ப்புண்டு!
சோபகிருது வருடம் மாசி மாதம் 3ம் தேதி
15-02-2024 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் முன் கோபத்தால் காரிய தடங்கல்கள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்கள் முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும்.புதிய வாகன யோகம் அமையும் மருத்துவ சிலவுகள் கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரம்
செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் இருந்த வீண் கவலை அகலும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபரங்கள் செழிப்படையும். வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.தொழில் போட்டிகள் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் மேல் பாசமும், பற்றும் அதிகரிக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் புதிய முயற்ச்சிகள் இன்று தள்ளி போடுங்கள்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் தவிற்ப்பது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். மனதிற்கினிய செய்தி கிடைக்கும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கேற்ற சிலவுகளும் உண்டாகும்.நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். வாகன வசதிகள் பெருகும்.உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப நன்மைக்கான விஷயங்கள் விரைந்து செய்வீர்கள்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வெளிமாநில தொடர்புகள் கிட்டும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும் .உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். புதிய வாகன யோகம் உண்டு.நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.முன் கோபத்தால் பாதிப்புகள் வரலாம் கவனம் தேவை தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே,தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் துணிச்சலுடன் எதையும் எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும்.வெளிதேச உறவினரிடம் இருந்து நல்ல செய்தி வரும். கடினமான வேலைகள் கூட எளிதில் முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
image credit -Freepik