
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரகளின் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும்.
சோபகிருது வருடம் தை மாதம் 2ம் தேதி 16-01-2024 செவ்வாய்க்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப உறவுக்குள் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் குறையும்.சகோதரர்களுக்குள் புரிதல் இருக்கும் . மன தைரியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனதில் சந்தோஷம் பிறக்கும்.குடும்ப நிதி நிலைமை சீராகும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். முக்கிய நபர் ஒருவர் மூலம் நிறைவேறாத பணி ஒன்று கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதில் புது எண்ணங்கள் உருவாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தொழில் வியாபாரம் மந்தநிலை காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வது நலம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, முக்கிய வேலைகள் திட்டமிட்டபடியே நடக்கும். பண வரவில் சில இடையூறுகள் இருக்கும். வேண்டியவர்களுக்கு உதவி செய்து தர இயலும். தொழில், வியாபாரம் செழிப்படையும். காலை 11:27 மணிக்கு ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு மனக்குழப்பம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதையும் திட்டமிட்டு செய்தல் அவசியம். யோக, தியானத்தில் மனம் ஈடுபடுகொள்ளும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும்.குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேரம் கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். அனுபவ அறிவை பயன்படுத்துவது நன்மை தரும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்.
விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவியை செய்து தர முடியும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள். காரிய தடை விலகும்.எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள் எப்போதும் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படவும். வீட்டில் மருத்துவச் செலவுகள் வரும். எதிர்பாராத வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். மாறுபட்ட யோசனைகள் மனதில் உதிக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் தவிற்க்கவும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0