
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
குரோதி வருடம் சித்திரை-05 18.04.2024 வியாழன் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடியும். தூர பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும். கடன் தொந்தரவு இருக்கும்.பண விவகாரங்களில் கவனம் தேவை உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்ர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். ஆன்மீக ஆர்வம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். மனதில் உயர்வான எண்ணங்கள் பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, பேச்சில் நிதானமும் விவேகமும் நிறைந்திருக்கும்.கைகளில் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்கள் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நெருங்கிய உறவுகளால் சில நெருக்கடிகள் வரலாம்.முன் கோபத்தை தவிற்பது நலம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பொருளாதார வசதிகள் பெருகும். உறவினர்களிடையே சுமுக உறவு ஏற்படும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர்.பண வரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் இனிமையான விஷயங்கள் நடக்கும். பெற்றோர் வழியில் நன்மை உண்டு. காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் கூடுதல் கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும்.பண தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் செலவுகள் காத்திருக்கும். அடுத்தவருக்கு உதவுவதில் ஆர்வம் கூடும்.விரைய சிலவுகள் உண்டாகும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
Image credits: Freepik