
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும்.
சோபகிருது வருடம் தை மாதம் 4ம் தேதி 18-01-2024 வியாழக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகள் தராதீர்கள். குடும்ப நபர்களிடம் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிர்பார்த்த காரியம் முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். முக்கிய வேலைகளை போராடி முடிக்க வேண்டிவரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். நட்பால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த ஈகோ மறையும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.அலைச்சல் அதிகமாக காணப்படும். செய்தொழில், வியாபாரம் செழிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போட வேண்டாம். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை வளரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்,சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். நண்ர்களிடம் கவனத்துடன் இருங்கள் பண விவகாரங்களில் கவனம் தேவை.இல்லத்தில் அமைதி, சந்தோஷம் உருவாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப உறவுக்குள் தேவையற்ற மன ஸ்தாபங்கள் வந்து மறையும்.குடும்ப நிதி நிலைமை சீரடையும். பிறரை விமர்சிப்பதால் பிரச்சினைகள் வரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில் வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். கொடுத்த பணம் வசூல் ஆகும்.எதிர்ப்புகள் அடங்கும். கணவன் மனைவி உறவில் இனிமை கூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே,மனதில் சந்தோஷம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். வெளிநாட்டு பயண முயற்சி வெற்றி தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.தொழில் வியாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். நிலுவை பணிகளை முடித்து காட்டுவீர்கள் .கனிவான பேச்சால் காரியம் சாதிக்க முடியும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மன உறுதி, தன்னம்பிக்கை வளரும்.எதையும் ரிஸ்க் எடுத்து செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கோர்ட் வழக்குகள் வங்கிக் கடன்கள் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மனதில் நினைத்ததை முடித்து காட்ட முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.பொருளாதார நிலை உயரும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0